search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்சரேக்கர்
    X
    சஞ்சய் மஞ்சரேக்கர்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ‌ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும் - சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் பும்ரா, முகமது ‌ஷமிக்கு பின்னால் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும். இங்கிலாந்தில் கோடையின் முதல் பாதியில் முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவை ஆகியோரை விட ‌ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

    இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று விளையாடிய போது சரியான ஸ்விங் பந்து வீச்சாளரை தேர்வு செய்யாமல் தவற விட்டது. இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற ஒரு காரணம் இருந்தது. அது நியூசிலாந்தில் நிலவும் சீதோஷ்ன நிலைமையை பயன்படுத்தக்கூடிய சரியான ஸ்விங் பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருந்ததுதான் காரணம்.

    இங்கிலாந்தில் இப்போது கோடைக்காலத்தின் முதல் பாதியில் சூரியன் அவ்வளவாக வெளியே வராது. இது நியூசிலாந்தில் இருந்ததை போலவே இருக்கும். இதனால் நான் 3-வது பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரையே பரிந்துரைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×