search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ
    X
    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ

    கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

    கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.
    புதுடெல்லி:

    1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் அங்கம் வகித்த வீரர்களான ரவிந்தர் பால்சிங் (வயது 62), எம்.கே.கவுசிக் (வயது 66) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முறையே லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால்சிங் மற்றும் கவுசிக்கின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆக்கியில் சிறந்து விளங்கிய ரவிந்தர் பால்சிங், கவுசிக் ஆகியோரை நாம் இழந்து இருக்கிறோம். அவர்கள் இந்திய விளையாட்டுக்கு அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்துடன் நாம் துணை நிற்போம்’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×