என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
    அபுதாபி:

    சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

    இதையடுத்து, 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி 10 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் கடைசி நான்கு பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 20 ரன்கள் விளாசினார் ஜடேஜா. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 

    இதுதொடர்பாக சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெயிக்வாட் கூறுகையில், எங்கள் டீம் உறுப்பினர்களில் ஒருவரின் பின்னால் நான் மறைந்திருந்தேன். கடைசி பந்தைப் பார்க்க மிகவும் பதட்டமாக இருந்தது. ஒரு பெரிய இலக்கை துரத்தும்போது, ​அணியின் தொடக்கம் மிகவும் முக்கியமானது. அதை எங்களால் செய்ய முடிந்தது மகிழ்ச்சி. எங்களில் ஒருவர் 13-வது ஓவர் வரை பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கேப்டன் டோனி எப்போதும் போல் கூலாக அமர்ந்திருந்தார் என தெரிவித்தார்.
    ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் ஜேசன் ராய், வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
    துபாய்:

    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 57 பந்தில் 82 குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். லோம்ரோர் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    சகாவை அவுட்டாக்கிய லோம்ரோர்

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார். இதனால் அணியின் ரன் வேகம் உயர்ந்தது.

    இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது ஐதராபாத் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும்.
    2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
    ஐ.பி.எல். 2021 சீசனில் சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், கே.எல். ராகுல், டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஐ.பி.எல். சீசன் தொடங்கியதில் இருந்து தவான் ஆதிக்கம் செலுத்து வருகிறார். அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கும் ஆரஞ்ச் தொப்பியை தொடர்ந்து தன்வசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 82 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 10 போட்டிகளில் 433 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் தவானிடம் இருந்த ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாக்கியுள்ளார். தவான் 10 போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல் 9 போட்டிகளில் 401 ரன்கள் அடித்துள்ளார். டு பிளிஸ்சிஸ் 394 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 362 ரன்களும் அடித்துள்ளனர்.
    அதிரடி ஓவர்களான கடைசி நான்கு ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியாததால் 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அந்த அணியின் எவின் லீவஸ் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். எவின் லீவஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார்.

    லீவிஸை வீழ்த்திய புவி

    16 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. 17-வது ஓவரில் 10 ரன்களும், 18-வது ஓவரில் 10 ரன்களும் சேர்த்தது. புவி வீசிய 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரின் 2-வது பந்தில் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் (57 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்ஸ்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 4 ரன்கள் மட்டுமே அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயலஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. எவின் லீவிஸ், 2. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. லியாம் லிவிங்ஸ்டன், 5. மஹிபால் லோம்ரோர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. சேத்தன் சகாரியா, 10. ஜெய்தேவ் உனத்கட், 11. முஸ்டாபிஜுர் ரஹ்மான்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. ஜேசன் ராய், 2. சகா, 3. கேன் வில்லியம்சன், 4. பிரியம் கார்க், 5. அபிஷேக் ஷர்மா. 6. அப்துல் சமாத், 7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் ஷர்மா.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 8 பந்தில் 22 ரன்கள் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஜடேஜா.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி 10 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் கடைசி நான்கு பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 20 ரன்கள் விளாசினார் ஜடேஜா. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. ஜடேஜா 8 பந்தில் 22 ரன்கள் விளாசியதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றபின், டி20-யில் அதிரடியாக விளையாடுவது மிகப்பெரிய சவால் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து மாதங்கள் விளையாடிய பின், ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது மிகவும் கடினமானது. பேட்டை சுழற்றி அடிக்க வலைப்பயிற்சியில் நான் அதிக அளவு பயிற்சி மேற்கொண்டேன். ஆகவே, வலைப்பயிற்சியில் என்ன செய்தோனோ, அதை போட்டியில் திரும்ப செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

    விக்கெட்டை விட கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை டார்கெட் செய்தது மிக முக்கியமானது. எங்களுக்கு அதான் போட்டிக்கான வெற்றி ஓவர். ஒவ்வொருவரும் அவர்களுடைய அணிக்காக அப்படித்தான் விளையாடுவார்கள். ருதுராஜ், டு பிளிசிஸ் எங்களுக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார்கள். இதுதான் அணிக்கு தேவை’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி, 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆர்.சி.பி இந்த வெற்றியைப் பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் கிலென் மேக்ஸ்வெல். அவர் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். மேலும் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த கலக்கல் ஆட்டத்தால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அவர் அறிவை சில நேரங்களில் பயன்படுத்துவதே கிடையாது. மும்பைக்கு எதிராக அவர் அறிவை பயன்படுத்தி நன்றாக விளையாடினார்.

    ஆட்டத்திற்குத் தகுந்தது போல அவர் தன் விளையாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார். அதனாலேயே பல போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிவிடுவார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மூலம் 2 மில்லியன் டாலர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், அதற்கு ஏற்றது போல் விளையாடுகிறாரா என்பது கேள்விக்குறியே' என்று கறார் கருத்து கூறியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் இணை-உரிமையாளர் பார்த் ஜிண்டால் கேள்வி எழுப்பியுள்ளார்.
    ஐ.பி.எல். டி20 உலகக் கோப்பை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரஷாப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஷ்வின், அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஷிகர் தவான்தான் தற்போது வரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஆர்.சி.பி. அணியின் சஹல் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை-உரிமையாளர் பார்த் ஜிண்டால் இந்திய அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    பார்த் ஜிண்டால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் ஏன் சில முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்து தேர்வாளர்கள் யோசிக்க வேண்டும். நம்முடைய டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நம்முடைய சிறந்த பேட்ஸ்மேன் இடம் பெறவில்லை. உங்களால் யூகிக்க முடிகிறதா?’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்தியாவின் சிறந்த டி20 ஸ்பின்னரும் மிஸ்சிங் எனக் குறிப்பிட்டுள்ளார். ஷிகர் தவான் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும், ஆர்.சி.பி.யின் சஹலும் அணியில் இடம் பிடிக்காதது குறித்து ஜிண்டால் குறிப்பிட்டிருக்கலாம் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ஆனால் ஐ.பி.எல். போட்டியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் 47 (ஆட்டமிழக்காமல்), 43 ரன்கள் விளாசியுள்ளார்.

    ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கியதை அடுத்து சென்னை, மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும் தொடர் வெற்றிகளைக் குவித்த காரணத்தினால் பிளே ஆஃப் தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.

    இப்படி தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார்.

    அவர், 'சென்னை அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் நன்றாக விளையாடி வந்தாலும் அவர்களுக்கென்று சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதை மற்ற அணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான், அவர்களுக்கு உள்ள குறைபாடுகள் என்ன, யாரெல்லாம் சரியாக திறனை வெளிப்படுத்துவதில்லை என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை. ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கியதை அடுத்து சென்னை, மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது.

    அந்தப் போட்டியில் சென்னை அணி, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மும்பை தவறவிட்டது' என்று சூசகமாக சென்னை அணியின் பேட்டிங் அந்தளவுக்கு வலுவாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரடியாக காண அதிகமான ரசிகர்களுக்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் கேட்டுள்ளது பி.சி.சி.ஐ.
    இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. இந்தியாவில் 2-வது அலை கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஐ.சி.சி. போட்டியை நடத்த தயங்கியது. இதனால் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்தன. அந்த வகையில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    தற்போது துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண 25 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிசிசிஐ மட்டும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு ஆகியவை இரண்டு ஐக்கிய அரபு அமீரக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    யு.ஏ.இ. அரசு அனுமதி அளித்தால் டி20 உலகக் கோப்பை 25 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறும்.
    நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் 2-வது பகுதி தொடரில் இதுவரை வெற்றியை ருசிக்கவில்லை.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ்.  ஐ.பி.எல். 2021 சீசனில் முதல் பாதி தொடரில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தது.

    கடந்த 19-ந்தேதி முதல் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான 2-வது போட்டியிலும், நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி. அணிக்கெதிரான 3-வது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியது.

    இதன்காரணமாக 10 போட்டிகளில் நான்கு வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றதன் மூலம் 10 ஆட்டங்களில் நான்கில் வெற்றிபெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன. இதனால் மும்பை இந்தியன்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டும்.
    பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்த 17-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேல் ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்த 17-வது வீரர் அவர் ஆவார். இதுவரை 20 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக அமித்மிஸ்ரா 3 முறையும், யுவராஜ்சிங் இரண்டு முறையும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

    ×