என் மலர்
விளையாட்டு
அபுதாபி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி. ஆல்ரவுண்டரான அவர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் செnனை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் மொயின் அலி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ஜோரூட் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

34 வயதான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 டெஸ்ட்டில் விளையாடி உள்ளார். 2,914 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 155 ரன் எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
வரும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசஷ் தொடர் ஆகியவற்றுக்காக நீண்ட நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.




முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட்டுகளுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 27 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சகா, (31 ரன்) ஹோல்டர் (47 ரன்) ஆகியோர் தாக்கு பிடித்து விளையாடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. இதில் 11 ரன்னே எடுக்கப்பட்டது.
பஞ்சாப் தரப்பில் ரவிபிஷ்னோய் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முகமது ஷமி 4 ஓவர் வீசி 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 8-வது தோல்வியை சந்தித்த ஐதராபாத் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று நம்புகிறேன்.
ஹோல்டர் அற்புதமாக விளையாடினார். அவர் ஒரே ஓவரில் என்னையும் மயங்க் அகர்வாலையும் அவுட் செய்தார். பேட்டிங்கையும் சிறப்பாக செய்தார்.
ஆடுகளத்தில் வேகம் இல்லை. நீங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இந்த ஆடுகளம் 160-170 ரன் எடுக்கும் ஆடுகளம் அல்ல என்பதும் அதிக ஷாட்டுகளை விளையாட கூடாது என்பதும் பேட்ஸ்மேன்களுக்கான பாடம். இதை யாராவது உணர்ந்து இருந்தால் நாங்கள் 140 ரன் எடுத்திருக்கலாம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முகமது ஷமி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்பீர்த் பிரார் ஒரு சிறந்த ஆல்-ரவுண்ட் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் உயரமான பந்து வீச்சாளர். அவரது பந்தில் அடித்து விளையாடுவது எளிதானதல்ல.
ஒவ்வொரு முறையும் அவருடன் நான் செல்லும் போது, கவலைப்படாதே நான் ரன்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிளே-ஆப் சுற்று வாய்ப்புக்கு பஞ்சாப் அணி எஞ்சி உள்ள அனைத்து ஆட்டங்களும் வெல்ல வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும். சென்னை அணியின் ரன் ரேட் (+1.18) நன்றாக உள்ளது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க் வாட், டுபெலிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாகர், பிராவோ ஆகியோர் முத்திரை பதித்து வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை அணி சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அடுத்துவரும் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.
கொல்கத்தா அணி பேட்டிங்கில் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், சுப்மன்கில், நிதிஷ் ரானா ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரசல், சுனில் நரேன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரூ அணி 10 புள்ளிகளுடன் (9 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். மும்பை அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றிபெற்று 8 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளது.







