search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மாவை அவுட்டாக்கிய மேக்ஸ்வெல்
    X
    ரோகித் சர்மாவை அவுட்டாக்கிய மேக்ஸ்வெல்

    ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணியின் ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    துபாய்:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, டி காக் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 

    57 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா- டி காக் ஜோடி

    இறுதியில், மும்பை அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    குறிப்பாக, 17-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, ராகுல் சாஹர் ஆகியோரை ஹாட்ரிக்கில் வீழ்த்தி அசத்தினார்.

    ஆர்சிபி அணி சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இது ஆர்சிபி அணி பெற்ற 6வது வெற்றி ஆகும்.
    Next Story
    ×