என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RCBvMI"
- முதலில் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.
பெங்களூரு அணி சார்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் இறங்கியது. பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.
இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி 148 ரன்கள் குவித்தது. டூ பிளசிஸ் 73 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 49 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
- துவக்கத்தில் திணறிய மும்பை அணி 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
- அதிரடியாக ஆடிய திலக் வர்மா, 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த திலக் வர்மா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து அதிரடியாக ஆட முற்பட்ட நேஹால் வதேரா 21 ரன்னில் வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். பெங்களூரு அணி தரப்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்