என் மலர்
கிரிக்கெட் (Cricket)

திலக் வர்மா
திலக் வர்மா அதிரடி... பெங்களூரு அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
- துவக்கத்தில் திணறிய மும்பை அணி 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
- அதிரடியாக ஆடிய திலக் வர்மா, 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த திலக் வர்மா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து அதிரடியாக ஆட முற்பட்ட நேஹால் வதேரா 21 ரன்னில் வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். பெங்களூரு அணி தரப்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.






