என் மலர்
செய்திகள்

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் அதிரடியால் ஐதராபாத்துக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
அதிரடி ஓவர்களான கடைசி நான்கு ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியாததால் 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அந்த அணியின் எவின் லீவஸ் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். எவின் லீவஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார்.

16 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. 17-வது ஓவரில் 10 ரன்களும், 18-வது ஓவரில் 10 ரன்களும் சேர்த்தது. புவி வீசிய 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரின் 2-வது பந்தில் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் (57 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்ஸ்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 4 ரன்கள் மட்டுமே அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story






