என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜா
    X
    ஜடேஜா

    டெஸ்ட் போட்டியில் இருந்து டி20 போட்டிக்கு மாறுவது மிகப்பெரிய சவால்: ஜடேஜா சொல்கிறார்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 8 பந்தில் 22 ரன்கள் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஜடேஜா.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி 10 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் கடைசி நான்கு பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 20 ரன்கள் விளாசினார் ஜடேஜா. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. ஜடேஜா 8 பந்தில் 22 ரன்கள் விளாசியதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றபின், டி20-யில் அதிரடியாக விளையாடுவது மிகப்பெரிய சவால் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து மாதங்கள் விளையாடிய பின், ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது மிகவும் கடினமானது. பேட்டை சுழற்றி அடிக்க வலைப்பயிற்சியில் நான் அதிக அளவு பயிற்சி மேற்கொண்டேன். ஆகவே, வலைப்பயிற்சியில் என்ன செய்தோனோ, அதை போட்டியில் திரும்ப செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

    விக்கெட்டை விட கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை டார்கெட் செய்தது மிக முக்கியமானது. எங்களுக்கு அதான் போட்டிக்கான வெற்றி ஓவர். ஒவ்வொருவரும் அவர்களுடைய அணிக்காக அப்படித்தான் விளையாடுவார்கள். ருதுராஜ், டு பிளிசிஸ் எங்களுக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார்கள். இதுதான் அணிக்கு தேவை’’ என்றார்.
    Next Story
    ×