என் மலர்
விளையாட்டு
- நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
- இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. முதல் 2 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்தது. கைல் மேயர்ஸ் (120 ரன்), ஷமர்க் புருக்ஸ் (101ரன்) தங்களது முதல் சதத்தை அடித்தனர்.
இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 89 ரன்னும், விக்ரம் ஜித்சிங் 54 ரன்னும், மூசா அகமத் 42 ரன்னும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டித்தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
- ஹர்த்திக் பாண்ட்யாவை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.
மும்பை:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்-ரவுண்டராகவோ மீண்டும் அணிக்குள் வருவார். 2 ஓவர் வீச முடியாத அளவுக்கு அவர் மோசமாக காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை.
அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.
உலக கோப்பைக்கு முன்பாக சில மாதங்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வேண்டும். அவர் இரண்டு வீரர்களுக்கான பணியை செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக விளையாடினால் அவர் முதல் நான்கு அல்ல ஐந்து இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். ஆல்-ரவுண்டராக ஐந்து, ஆறு அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகமதாபாத், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது. இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.
அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார். நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.
அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார். "அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
- இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 9-ந்தேதி டெலியில் நடக்கிறது.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2-ந்தேதி டெல்லி வந்தடைந்தது. தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் இன்று டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் முடிவில் வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள். இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தினேஷ் கார்த்திக், சாகல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஹர்சல் பட்டேல் ரவி பிஷ்னோய், அவெஷ்கான், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரபெல் நடாலுடன் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார். பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.
இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 'களிமண் தரை போட்டியின் மன்னன்' என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலுடன், நார்வேயின் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார்.
இறுதிப்போட்டி என்பதால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை யார்? வெல்வார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.
- இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
- தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.
பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.






