என் மலர்
விளையாட்டு
கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.15 மணிக்கு நடக்கும் அரை இறுதி போட்டியில் 5-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.
21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 13 முறை கைப்பற்றியுள்ளார். அவர் 14-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் தோற்றார். இந்த முறை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளார்.
ஆனால் களிமண் தரையில் சிறப்பாக விளையாடும் நடாலுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதனால் ஸ்வெரேவ் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.
கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே)-20-ம் நிலை வீரர் மரின் சிலிச் (குரேஷியா) மோது கிறார்கள். இவர்கள் இருவரும் பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள்.
நெல்லை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது. நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை சந்திக்கிறது.
இதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன’ என்றார்.
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் 2-வது போட்டி நேற்று ஆம்ஸ்டெல்வின் நகரில் நடந்தது. டாஸ் ஜெயித்த நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 48.3 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. நெதர்லாந்து அணி பேட்டிங் முதல் 3 வீரர்களான விக்ரம்ஜித் சிங் 46 ரன்னும், மேக்ஸ் ஓடவுத் 51 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அக்கேல் ஹூசைன் 4 விக்கெட்டும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அந்த அணி 99 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் பிராண்டன் கிங்-கார்டி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வெஸ்ட்இண்டீஸ் 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கிங் 91 ரன்னுடனும், கார்டி 43 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டி தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற 7-ந் தேதி கொழும்பில் நடக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறும்போது, மலிங்காவின் அனுபவம் நிபுணத்துவம் அறிந்து நாம் முக்கியமானதாக இருக்கும்.
இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தொழில்நுட்பம் நிபுணத்துவம், அணிக்கு மிகவும் ஆகியவற்றை வழங்கி களத்தில் திட்டங்களை செயல்படுத்த உதவுவார். அவரது அனுபவம் குறிப்பாக 20 ஓவர் தொடரில் அணிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே பாராட்டி உள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. அந்த அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
ஹர்த்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுகள் குவிந்தன. அதேபோல் அவர் பேட்டிங், பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பை அளித்தார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே பாராட்டி உள்ளார்.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்னை பொறுத்தவரை சிறந்த தருணம் என்னவென்றால் குஜராத் அணி விளையாடிய விதம்தான். குறிப்பாக ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக வந்து கோப்பையை வென்றது, தனிப்பட்ட செயல்திறனில் சிறப்பாக செயல்பட்டதாகும்.
மும்பை அணியில் இருந்து சென்று புதிய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது எளிதானதல்ல. ஹர்திக் சகோதரர் குர்ணல் பாண்ட்யா எனது அகாடமியில் சேர்ந்தார். அங்கு ஹர்திக் பாண்ட்யா சுற்றி திரிவார். அப்போது வலைகளுக்கு பின்னால் ஓடி பந்தை பிடிப்பார். அவரை அழைத்து வரும்படி குர்ணல் பாண்ட்யாவிடம் கூறினேன். அப்போது ஹர்திக்கிடம் கிரிக்கெட் மீதான வேட்கை அவரது கண்களில் இருப்பதை பார்த்தேன். அவர் எல்லா நேரத்திலும் சிறப்பாக விளையாட விரும்புகிறார். முன்பு அவர் முப்பரிமாண வீரராக இருந்தார். தற்போது நான்கு பரிமான வீரராக உள்ளார் என்று நம்புகிறேன்.
அவர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார். தற்போது கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக உள்ளார்.
இதுபோன்ற திறமையான வீரர் தேசிய அணியில் இருப்பதை பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் தோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகி, புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றார்.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், வில் யங் களமிறங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.
நியூசிலாந்து அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கடைசி கட்டத்தில் டிம் சவுத்தி 26 ரன் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த அந்த அணி அதன்பின் விக்கெட்டுகளை இழந்தது. ஜாக் கிராவ்லி 43 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும் எடுத்தனர்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியை விட 13 ரன்கள் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.
நியூசிலாந்து சார்பில் டிரண்ட் போல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நேற்று நடந்த அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் டாரியாவை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ கோவ், இத்தாலியின் மார்ட்டினா டிடெவிசன் ஆகியோர் மோதினர். இதில் கோகோ கோவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப்ப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ கோவ் ஆகியோர் மோத உள்ளனர்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஆக்ரா:
இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார்.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டோனி, விராட் கோலி, மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் முடிவு மோசடி செய்து மாற்றப்பட்டதாக பா.ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில்தான் அந்த அணி அறிமுகமானது.
இந்த நிலையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் முடிவு மோசடி செய்து மாற்றப்பட்டதாக பா.ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலான கருத்துக்கள் இருக்கின்றன. அமித்ஷா வின் மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறி விக்கப்படாத சர்வாதி காரியாக இருப்பதால் அரசு விசாரிக்காது. இவ்விவகாரத்தில் தெளிவு படுத்துவதற்கு பொதுநல வழக்கு தாக்கல் செய்வது அவசியமாக இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சுவாமியின் இந்த டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...சென்னை எனது மற்றொரு வீடு- எம்எஸ் டோனி
மாவட்ட போட்டிகள் மூலம் வீரர்கள் உருவாகிறார்கள் என திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளி விழாவில் எம்எஸ் டோனி கூறியுள்ளார்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடந்தது.
விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான டோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணை சேர்மனும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு டோனி இதை வழங்கினார்.
மாவட்ட கிரிக்கெட் சங்க விழாவில் நான் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும். சென்னையில் இருந்தபடி எனது ரஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.
பள்ளி அளவிலான போட்டிகளில் இருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகளின் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்பது பெருமையானது.
மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். திறமையான வீரர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும்அவசியம் இருக்க வேண்டும்.
25-வது ஆண்டை நிறைவு செய்த திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை வாழ்த்துகிறேன். இந்த சங்கம் அதற்கு மேலும் விழாவை கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐ.பி.எல். இந்திய அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு டோனி பேசினார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
பாரீஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ருப்லெவ்-இருபதாம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிலிச் 5-7 , 6-3, 6-4, 3-6, 7-6 (10-2) என்ற செட் கணக்கில் கடும் போராட் டத்துக்கு பிறகு வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் ஏற்கனவே கால்இறுதியில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவை வீழ்த்தி இருந்தார்.
2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
நள்ளிரவில் நடந்த கால்இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 4-6, 7-6 (7-2) 6-3 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேயை (டென்மார்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் சிலிச்-கேஸ்பர் ரூட், ரபெல் நடால் (ஸ்பெயின்)-அலெக்ஸ்சாண்டர் கவரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. ஒரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-கசட்கினா மோதுகிறார்கள்.
மற்றொரு அரை இறுதியில் கோகோ கவூப் (அமெரிக்கா)-மார்ட்டினா டிரெவிசியன் (இத்தாலி) மோதுகிறார்கள்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி இன்று நடைபெறும் அரைஇறுதியில் ரோஜர் (நெதர்லாந்து),-மார்சிலோ (சால்வடார்)ஜோடியை எதிர் கொள்கிறது.
இந்திய அணி ஜூலை 22 முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி முடித்தார்கள். அடுத்து தேசிய அணியில் வீரர்கள் ஆட உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று இந்தியா வருகிறது.
20 ஓவர் போட்டிகள் வருகிற 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரில் நடக்கிறது. அதன் பிறகு இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தில் (ஜூன் 26 மற்றும் 28) ஆடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தள்ளிவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் ஜூலை 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை விளையாடுகிறது.
அதோடு இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டிகள் (ஜூலை 7, 9, 10) மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் (ஜூலை 12, 14, 17) விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி ஜூலை 22 முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவரில் ஆடுகிறது. இதை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.
ஒருநாள் போட்டிகள் ஜூலை 22, 24, மற்றும் 27-ந் தேதிகளிலும், முதல் 20 ஓவர் ஆட்டம ஜூலை 29-ந் தேதியும் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. அதை தொடர்ந்து ஆகஸ்டு 1 மற்றும 2-ந் தேதிகளில் 2-வது, 3-வது 20 ஓவர் ஆடடம் செயிண்ட் கிட்ஸ் மைதானததில் நடைபெறுகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்டு 6, 7-ந் தேதியில் நடக்கலாம்.
உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை அக்டோபர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.






