என் மலர்
விளையாட்டு
மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
1992-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
இன்று, மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
கங்குலியின் டுவிட்டர் பதிவையடுத்து, பிசிசிஐ பதவியில் இருந்து கங்குலி விலகப்போவதாக தகவல் பரவியது. அரசியலில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும், பாஜகவில் சேரலாம் என்றும் பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்
1992-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
இன்று, மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
கங்குலியின் டுவிட்டர் பதிவையடுத்து, பிசிசிஐ பதவியில் இருந்து கங்குலி விலகப்போவதாக தகவல் பரவியது. அரசியலில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும், பாஜகவில் சேரலாம் என்றும் பேசப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்
கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மாண்ட்லி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
லண்டன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த 20 வயது இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர்.
இவர் சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மாண்ட்லியை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மாண்ட்லி மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் விரைவில் குணமடைய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பீகார்:
டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.
இதற்கு நியூ குளோபல் நிறுவனம் சரியாக சந்தைப்படுத்தாதே காரணம் என டிஎஸ் எண்டர்பிரைசஸ் குற்றம்சாட்டியது.
இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதமிருந்த உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது செல்லுபடியாகவில்லை. இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் டோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. அவர் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் 'நம்பர் 1' வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் 'நம்பர் 1' வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
டென்னிஸ் உலகின் இரு பெரும் நட்சத்திரங்கள் மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சம பலத்துடன் விளையாடினர். விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது
பாகு:
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது.
இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது.
தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
திருச்சி:
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப்பில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், பீகார், அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து கராத்தே மாஸ்டர் ராஜசேகர் தலைமையில் 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழக வீரர்கள் கட்டா, குமித்தே, டிம்கட்டா பிரிவுகளில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளின் முடிவில் தமிழக அணி 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை தட்டிச் சென்றனர். பதக்கம் வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை மறுதினம் நடைபெற அரை இறுதியில் போபண்ணா ஜோடி, நெதர்லாந்தின் ரோஜர் - எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியை எதிர்கொள்கிறது.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல் - பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.
ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஜகார்த்தா:
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.
இதில், இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.
ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
புதுமுக அணியான குஜராத் தனது அறிமுக போட்டியிலேயே ஐ.பி.எல். கோப்பையை வென்று முத்திரை பதித்தது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவி முக்கிய பங்கு வகித்தது.
டேவிட் மில்லர், ரஷீத்கான், சுப்மன்கில், ராகுல்திவேதியா, விர்த்திமான் சஹா போன்ற வீரர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
இறுதிப்போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தியதோடு பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார். அவரது கேப்டன் பதவியை முன்னாள் வீரர்கள் வீரேந்திர ஷேவாக், ரவிசாஸ்திரி ஏற்கனவே பாராட்டி இருந்தனர்.
டோனியை போலவே ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் செயல்படுவதாக டெலிவிஷன் வர்ணனையாளரும், முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் புகழாரம் சூட்டி இருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும், ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் திறமையை பாராட்டி உள்ளார்.

புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல். போட்டியில் மகத்தான சாதனையை படைத்தது. எதிர்கால இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட சாத்தியம் இருக்கிறது. அவர் குஜராத் அணியை வழி நடத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல குஜராத் அணியின் ஆலோசகரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரருமான கேரி கிரிஸ்டனும் கேப்டன் பதவியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டி உள்ளார்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரோகித்சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார். 3 வடிவிலான போட்டிகளுக்கும் அவர் கேப்டனாக இருக்கிறார்.
அவருக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கணித்து உள்ளனர்.
28 வயதான ஹர்திக் பாண்ட்யா இந்த ஐ.பி.எல். போட்டியில்487 ரன்கள் எடுத்தார். 8 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
ஓஸ்லோ:
செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 52 வயது விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்டார். போட்டியின் 43வது நகர்வின் போது கார்ல்சன் விஸ்வநாதன் ஆனந்திடம் வீழ்ந்தார்.
இதையடுத்து கார்ல்சனை வீழ்த்திய ஆனந்த், நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டித் தொடரில் 4-வது இடம் பிடித்தார்.
இந்தத் தோல்வியினால் கார்ல்சன் 2-வது இடத்துக்குச் சென்றார். 5-வது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வியடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான வெஸ்லி சோ, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்து கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
தெண்டுல்கரின் ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.
மும்பை:
கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி ஆகியோருக்கு இடமில்லை. இருவரது ஆட்டமும் இந்த ஐ.பி.எல். போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்யவில்லை.
விராட்கோலி 341 ரன் எடுத்து இருந்தார். சராசரி 22.73 ஆகும். ரோகித் சர்மாவின் சராசரி 19.14 ஆக இருந்தது. அவர் 14 ஆட்டத்தில் மொத்தம் 268 ரன்களே எடுத்தார்.
ஐ.பி.எல். கோப்பையை வென்ற குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெண்டுல்கர் அணிக்கு தேர்வு செய்த லெவனுக்கு கேப்டனாக உள்ளார்.
ஜஸ்பட்லர், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், 3-வது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும் அவர் தேர்வு செய்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு அவரது அணியில் இடமில்லை.
தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவன் வீரர்கள் வருமாறு:-
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷிகர்தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா), லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து), தினேஷ் கார்த்திக், ரஷீத்கான், முகமது ஷமி, பும்ரா, யசுவேந்திர சாஹல்.
குஜராத் அணியில் 4 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் தலா 2 பேரும், லக்னோ, பெங்களூர், மும்பை அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் - வார்னர் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்
4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் ஒருவராக மெட்வெடேவ் பார்க்கப்பட்டார்.
இருப்பினும் அவர் அவர் காலிறுதிக்கு முந்தய சுற்றில் வெளியேறியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு 4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை வீழ்த்தி இளம் வீரர் ஹோல்கர் ரூனே வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். ரூனே 7-5 3-6 6-3 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.






