என் மலர்
விளையாட்டு
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் - 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் - 2016) உள்ளார்.
இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இதில் ஒரு போட்டியில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர்- அலியாசிம்மை, ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் ஃபெலிக்ஸ் ஆகரை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன்மூலம் காலிறுதி போட்டியில் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார்.
இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
ஏற்கனவே 13 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்ற நடால், ஜோகோவிச்சை எதிர்கொள்ளும்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தோம்.
இளம் வீரர்கள், சீனியர்கள் என அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக விளையாடினர். அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதனால் ஏலத்தில் அவர்கள் மீது முதலீடு செய்து எடுத்தோம். இன்றைய நாள் (நேற்று) எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
ஒரு அணியாக விளையாடினால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த அணியே சரியான உதாரணம்.
நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள். போட்டிகளை வெல்லக் கூடிய சரியான பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பினோம். 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கலாம்.
ஆனால் பந்து வீச்சாளர்கள் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். வீரர்களுக்கு அணி ஊழியர்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம்.
5 இறுதிப்போட்டிகளில் (மும்பை அணியில் விளையாடிய போது) வெற்றி பெற்றதால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.
குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம். வரும் தலைமுறையினர் இதை பற்றி பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐபிஎல் 2022 போட்டி தொடரில் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய குஜராத் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வென்றது. சுப்மன் கில் 45 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 34 ரன்னும், டேவிட் மில்லர் 32 ரன்னும் எடுத்தனர்.
புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தி உள்ளது.
கோப்பை வென்ற குஜராத் அணிக்கு ரூ.20½ கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.12½ கோடி வழங்கப்பட்டது.
3-ம் இடம் பெற்ற பெங்களுரு அணிக்கு ரூ.7 கோடி, 4-வது இடத்தை பிடித்த லக்னோ அணிக்கு ரூ.6.5 கோடி வழங்கப்பட்டது.
இத்தொடரில் அதிக ரன் (863) குவித்த ராஜஸ்தானின் ஜோஸ்பட்லருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட் (26) கைப்பற்றிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர சாகலுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.
அதிக சிக்சர் (45) அடித்த ஜோஸ் பட்லர் ரூ.10 லட்சம் பெற்றார்.
ஆட்டத்தை மாற்றுபவர் விருது ஜோஸ் பட்லர் (ரூ.10 லட்சம் பரிசு) பெற்றார்.
தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.
வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (ஐதராபாத்) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
சிறந்த கேட்ச் விருது லக்னோ அணி வீரர் எவன் லீவிஸ் (கொல்கத்தாவுக்கு எதிராக) பெற்றார்.
இறுதிப் போட்டியில் 157.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத்தின் பெர்குசன் இத்தொடரின் அதிக வேக பந்துவீச்சாளர் விருதை வென்றார்.
நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ஸ்மேன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசியிருந்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி களம் இறங்கி விளையாடிய போது குஜராத் வேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 157.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் வேகமான பந்தை வீசி பதிவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், டெல்லி அணிக்கு எதிராக 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்திருந்தார். தற்போது பெர்குசன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது.
குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாகா 5 ரன்னுக்கும், மேத்யூ வேட் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் அடித்தார்.
பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் அணி18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதையும் படியுங்கள்...
ஆசிய கோப்பை ஹாக்கி - மலேசியா உடனான போட்டியை டிரா செய்தது இந்தியா
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது.
ஜகார்த்தா:
11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
கொரோனா பரவலால் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா நடைபெறாத நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.
இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அசத்தினார்.






