என் மலர்
விளையாட்டு
விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் 2½ ஆண்டுகளாக சதம் அடிக்காத இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு இந்த ஐ.பி.எல். சீசன் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.
பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.
இந்த நிலையில் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.
ரன்கள் குவிக்காத போது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.
இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகி உள்ளார்.
இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
33 வயதான விராட் கோலி 16 ஆட்டத்தில் விளையாடி 341 ரன்கள் எடுத்தார். 2 முறை மட்டுமே அரை சதம் அடித்தார். அவரது சராசரி 22.73 ஆகும்.
பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க வீரராக அடி குறைவான ரன்களையே எடுத்தார்.
இந்த நிலையில் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த தவறுகளை விட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தவறுகளை செய்து விட்டதாக முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இது நமக்கு தெரிந்த விராட் கோலி அல்ல. வேறு விராட் கோலிதான் இந்த சீசனில் விளையாடினார். இந்த சீசனில் செய்த தவறுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அவர் செய்தது இல்லை.
ரன்கள் குவிக்காத போது இது போன்று நிகழலாம். மோசமான பேட்டிங் நிலையை மாற்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். அது பல்வேறு விதமாக ஆட்டம் இழப்பதற்கு வழி வகுக்கும்.
இந்த சீசனில் அனைத்து விதமான முறையிலும் கோலி அவுட் ஆகி உள்ளார்.
இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தோல்வி அடைந்த போதிலும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தற்காக விராட் கோலி தனது உருக்கமான பதிவில் நன்றி தெரிவித்து உள்ளார்.
இறுதிப் போட்டியை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அகமதாபாத் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாசில் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்...
மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது சூப்பர் நோவாஸ்
3வது சுற்றில் மியோமிர் கெக்மனோவிச்சை நேர் செட்களில் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் மைக்கேல் யெமர் ஆகியோர் மோதினர். இதில் 6-2,6-2,6-1, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் 4 வது சுற்றுக்கு முன்னறினார்
மற்றொரு போட்டியில் டென்னிஸ் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள டேனில் மெட்வடேவ் மற்றும் மியோமிர் கெக்மனோவிச்சை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வடேவ் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார்.
புனே:
மகளிருக்கான 4-வது சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வந்தது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெலாசிட்டி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டாட்டின் 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் அடித்தார்.
இதை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் நோவாஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்...ஆசிய கோப்பை ஹாக்கி - ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளிட்ட வீராங்கனைகள் முதல் சுற்றில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், பெலாரசின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்.
இதில் சாஸ்னோவிச் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் கெர்பரை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றில் கெர்பர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி, இன்று வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஜகார்த்தா:
11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
மும்பை:
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்பட்டார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டனர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.
இதுகுறித்து லாரா கூறியதாவது:-
நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும்போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.
என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.
இவ்வாறு கிண்டலாக கூறினார்.
லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜகார்த்தா:
11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை 12 வீரர்கள் புதுமுகங்கள். இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் தீவிரம் காட்டுவதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.
அகமதாபாத்:
பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.
பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார்.
இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
பாரிஸ்:
நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் நெதர்லாந்தை சேர்ந்த 26-ம் நிலை வீரரான போடிக் வான் டி-யை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெறச் செய்தார்.
அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதையும் படியுங்கள்...
அசிதா பெர்னாண்டோ அபாரம் - வங்காளதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
துபாய்:
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், வங்காளதேசம், இலங்கை டெஸ்ட் தொடருக்கு பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் இன்று வெளியானது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இலங்கை அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 55 சதவீத வெற்றியுடன் இந்தப் பட்டியலில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 75 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 71.43 சதவீதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும் உள்ளது. 58.33 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது.






