search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angelique Kerber"

    • நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.
    • 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன்.

    முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனியை சேர்ந்த 34 வயது ஏஞ்சலிக் கெர்பர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அத்துடன் அவர் கர்ப்பம் காரணமாக வருகிற 29-ந் தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

    இது குறித்து ஏஞ்சலிக் கெர்பர் தனது டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். ஆனால் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டி இருவருக்கு எதிராக ஆடுவது நியாயமான போட்டியாக இருக்காது என்பதால் விலக முடிவு எடுத்தேன்.

    அடுத்த மாதத்தில் இருந்து ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறேன். ஆனால் இது மிகச்சிறந்த காரணத்துக்காக என்று நம்புகிறேன். நான் உங்கள் எல்லோரையும் தவற விடுகிறேன். நியூயார்க் எனது டென்னிஸ் வாழ்க்கையில் அடிக்கடி திருப்பு முனையாக இருந்து இருக்கிறது.

    இதனால் இந்த வருடமும் வித்தியாசமாக இருக்காது என்று உணர்கிறேன். இங்கு 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றதுடன் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தேன். இதனால் நியூயார்க்குக்கு எனது மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறேன். அதே நேரத்தில் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.

    • அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • 5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15-வது வரிசையில் உள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற 3-வது சுற்று போட்டிகளில் 3-வது வரிசையில் இருக்கும் ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கார்லோஸ், அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    20-வது வரிசையில் உள்ள ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளிட்ட வீராங்கனைகள் முதல் சுற்றில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், பெலாரசின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்.
     
    இதில் சாஸ்னோவிச் 6-4, 7-6  என்ற நேர் செட்களில் கெர்பரை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றில் கெர்பர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சுடன் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மோதுகின்றனர். #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மல்லுகட்டுகிறார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரீனா, இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

    முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான அரை இறுதி ஆட்டம் 5½ மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவு கிடைக்காமல் இழுத்து கொண்டே போனது. #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 11-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் 12-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.

    இரண்டு வீராங்கனைகளும் அடுத்தடுத்த தரநிலை பெற்றிருந்ததால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என எளிதில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



    ஏஞ்செலிக் கெர்பர் இறுதிப் போட்டியில் செரீனா வில்ல்லியம்ஸ் அல்லது ஜூலியா ஜார்ஜெஸ் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார்.
    ×