search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    ஜாஸ் பட்லர்          விராட் கோலி
    X
    ஜாஸ் பட்லர் விராட் கோலி

    ஐபிஎல் கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஜாஸ் பட்லர்

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார்.

    அகமதாபாத்:

    பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  

    பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     
    ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார். 

    இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×