என் மலர்
விளையாட்டு
இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.
அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்களூரு அணி தோற்கடித்தது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,920 ரன்கள் எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிக்கும் பண்ட் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 1,920 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த்துள்ளார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:
ரிஷப் பண்ட் 100-க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் சாதனை புத்தகங்களில் அவரது பெயர் பொறிக்கப்படும். 11 வீரர்கள்தான் இந்தியாவில் இதை சாதித்துள்ளனர். அவர்களின் பெயர்களை நாம் நினைவுகூர முடியும்.
விராட் கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா? ஏனெனில் 100-150 டெஸ்ட்கள், ஏன் 200 டெஸ்ட்களை ஆடினார் என்றால் சாதனை புத்தகத்தில் இருந்து அவர் பெயரை யாரும் அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார் .
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கையின் அசிதா பெர்னாண்டோ இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மிர்புர்:
இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.
வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .
லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 506 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 145 ரன்னும், சண்டிமால் 124 ரன்னும், கருணரத்னே 80 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் ஹொசைன் 4 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 169 ரன்னில் ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 58 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 6 விக்கெட், ரஜித 2விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி 3 ஓவரில் வெற்றிக்கு தேவையான 29 ரன்களை எடுத்தது. அத்துடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்)-13-ம் நிலை வீராங்கனை எலெனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா) மோதினர். இதில் கார்னெட் 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த ஒஸ்டா பென்கோ, 2017-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்னெட் 3-வது சுற்றில் சீனாவின் கின்வென் ஜெங்க்யுடன் மோதுகிறார். இன்று ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் 3-ம் சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களான ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் களம் காணுகிறார்கள்.
இதையும் படியுங்கள்...லக்னோ அணி அடுத்த சீசனில் இன்னும் வலுவாக வரும்- காம்பீர்
உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்தார்.
புது டெல்லி:
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
பின் காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் லிரனுடன் மோதி தோல்வியை தழுவினார். வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அவரது சிறிய தவறினால் தோல்வியுற்று 2வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் தனது 18 வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தா, பொதுத்தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டு பெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாத்த்:
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்க ளூரு அணி தோற்கடித்தது.
இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டுபெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்தை பிடித்ததால் இறுதிப் போட்டிக்கான முதல் சுற்றில் தோற்றாலும், இன்னொரு வாய்ப்பாக 2-வது தகுதிச்சுற்றில் விளையாடுகிறது. இதனை பயன்படுத்தி அந்த அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர், தேவ்தத் படிக்கல், சாம்சன், ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் சாகல், அஸ்வின், போல்ட், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணி பேட்டிங்கில் விராட்கோலி, ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.
வெளியேற்றுதல் சுற்று போட்டியில் ரஜத் படிதார் சதம் அடித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் முனைப்பில் பெங்களூரு உள்ளது. அந்த அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லவில்லை.
இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுரூவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-
லக்னோ அணிக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்தது. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடர்: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா
இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சென்னை:
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது.
இதை தொடர்ந்து டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிறிய தவறினால் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன.
அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.
ஜகார்த்தா:
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது.
அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் திப்சன் டிர்கி மற்றும் அபாரன் சுதேவ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.
திப்சன் டிர்கி 4 கோல்களும், சுதேவ் ஹாட்ரிக் கோல் அடித்தனர். மேலும் இந்திய வீரர்கள் செல்வம், பவன், எஸ்.வி.சுனில் பிரேஸ் கோல் அடித்து அசத்தினார்.
இதனால் இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
நீச்சல் வீரர் ஆர்யன் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 18 வயதான ஆர்யன் நெஹ்ரா சிறந்து விளங்குகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 5 தங்கப்பதக்கங்களை வென்றார்.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக இளையோர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தயாராகுவதற்காக துபாயில் உள்ள அக்வா தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறவேண்டும் என்ற நீச்சல் வீரர் ஆர்யன் நெஹ்ராவின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு இந்திய ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளது.
விமானக் கட்டணம், தங்கும் செலவு, பயிற்சியாளர் கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை இத்தொகையில் அடங்கும்.
இதேபோல், உலகின் முதல்நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயி்ல் பயிற்சி பெறவேண்டும் என்ற இந்திய வீரர் லக்சயாசென்னின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்க கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இந்த மாதம் நடைபெற்ற தாமஸ் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற லக்சயா சென், மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ள பயிற்சியில் விக்டர் அக்சல்சன்னுடன் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார்.
பின்னர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியிலும் பங்கேற்க லக்சயாசென் முடிவு செய்துள்ளார்.
2022, 2021, 2020, 2018 ஆகிய ஆண்டுகளில் கே.எல். ராகுல் 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
மும்பை:
நடைபெற்று வரும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் 626 ரன்கள், 2020-ஆம் ஆண்டில் 670 ரன்கள் மற்றும் 2018-ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019-ஆம் ஆண்டும் மட்டும் 593 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் 600 ரன்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.
இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் பொருளாதாரம் பற்றி பேசாத முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் ஆட்சி கவிழ்ப்பில் சதி இருப்பதாக பேரணி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
லாகூரில் என்ன நடக்கிறது? பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களி பணம் இல்லை. அரசியல் வாதிகள்
எடுக்கும் முடிவுகளால் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
இவ்வாறு முகமது ஹபீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.






