search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    தென்கொரியா உடனான போட்டி டிரா - ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா தகுதிபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

    ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    ஜகார்த்தா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.

    இதில், இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×