என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் அணி"
- 2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார்.
- 2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணி யில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.
இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன்கில் விலகுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அறிமுக போட்டியில் அந்த அணி கோப்பையை வென்றது. 2023-ல் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவினார்.
இதனால் சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் குஜராத் அணி 'லீக்' சுற்றோடு வெளியேறியது.
2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார். குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்கிறது. இதே போல ரஷீத்கானும் அந்த அணியில் தக்க வைக்கப்படுகிறார்.
இதற்கிடையே சுப்மன்கில் ஏலத்தில் வருவதற்கு மிக முக்கியமான அணிகள் விரும்புவதாக குஜராத் அணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் குஜராத் அணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே லக்னோ அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரண், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின்கான், பதோனி ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 5 வீரர்களுக்கும் மொத்தம் ரூ.51 கோடி செலவழிக்கும் என்று தெரிகிறது.
2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுலை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு வேளை அவர் தேவைப்பட்டால் ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
- குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி கள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
3-வது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
12-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பெங்களூருவுக்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையுடன் உள்ளது.
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. உ.பி.வாரியர்ஸ் 4 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 30-26 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
அந்த சமயத்தில் குஜராத் மாற்று ஆட்டக்காரர் மகேந்திர ராஜ்புத் ஒரே ரைடில் 5 பேரை அவுட் ஆக்கி, ஆல்-அவுட்டும் செய்ததால், ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. முடிவில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 50-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.






