என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

    காலே:

    ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரமேஷ் மெண்டீஸ் 29 ரன்னிலும் தீக்‌ஷனா 10 ரன்னிலும் ஜெயசூர்யா 0 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் இரட்டை சதம் விளாசினார். கடைசி விக்கெட்டாக ரஜிதா 0 ரன்னில் அவுட் ஆனார். சண்டிமால் 206 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பதும் நிசங்காவுக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார்.
    • இலங்கை அணியில் இதுவரை 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 364 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் இலங்கை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்காவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவருக்கு மாற்று வீரராக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் இதுவரை மேத்யூஸ், பிரவீன் ஜெயவிக்ரமா, பதும் நிசங்கா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
    • 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    முதல் ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. நாட்டிங்காமில் நேற்றுநடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றன.

    முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்திய அணியில் ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, முகமது சமி, ஜடேஜா, சாகல், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பேர்ஸ்டோவ், மொயின் அலி, பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், டேவிட் வில்லி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    20 ஓவர் போட்டி தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்துள்ளது என்பதால் இத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சாகல், முகமது சமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், பிலிப் சால்ட், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, ஹாரி புருக், சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, பார்கின்சன், டாப்லே.

    • ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் மட்டும் இருக்கும் போது ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • போட்டி முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    ஆம்ஸ்டெல்வீன்:

    15-வது பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, மூன்று லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வி, 2 டிரா பெற்றது. இதனால் இரண்டு புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது.

    போட்டி விதியின்படி கால் இறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அதன்படி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஸ்பெயின் அணியுடன் நேற்று இந்தியா மோதியது. இதில் வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின.

    ஆனால் தொடக்கத்தலேயே கோல் அடிக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது.

    ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் மட்டும் இருக்கும் போது ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    போட்டி முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி போட்டித்தொடரில் இருந்து வெளியேறியது.

    கால் இறுதிக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    • விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
    • ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பார்ம் இன்றி இருப்பதால் கடும் விமர் சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, 'பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. 20 ஓவர் போட்டியில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உலகின் நம்பர் 2 பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியையும் நீக்கலாம்' என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கபில்தேவ் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    அவர் (கபில்தேவ்) வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது.

    நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற-தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது.

    விராட் கோலி

    விராட் கோலி

    ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும். இது அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால ஆட்டத்தை பார்க்கக்கூடாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.

    விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 113 ரன்கள் அடித்தார்.
    • நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் 127 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நியுசிலாந்து அணி விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கும் இடையே டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 113 ரன்கள் குவித்தார். கர்டிஸ் கேம்பர் 43 ரன்னும், ஆண்ட் மெக்பிரைன் 39 ரன்னும் அடித்தனர்.

    பின்னர் 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய விளையாடிய நியுஸிலாந்து அணியில் தொடக்க வீரர் மார்டின் குப்தில் 51 ரன்கள் எடுத்தார். க்ளென் பிலிப்ஸ் 38 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய நியூசி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 82 பந்துகளில் 127 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் அந்த அணி 49.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    • திருத்தப்பட்ட திட்டங்களுக்கான இணையதளம் அறிமுகம்.
    • எந்தவொரு விளையாட்டு வீரரும் மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    விளையாட்டுத் துறையின் இந்த திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.  


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலன் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

    விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது, தனிப்பட்ட எந்தவொரு விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 215 ரன்களை குவித்தது.
    • இந்திய வீரர் சூர்யகுமார், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை குவித்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரோகித் சர்மா தலா 11 ரன்னில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார். மைதானம் முழுவதும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றது.

    • முதலில் ஆடிய திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.

    கோவை:

    கோவையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 15 ரன்னில் அவுட்டானார். கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் தலா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிஜித் சந்திரன் 17 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கோவை அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாருக் கான் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக கோப்பை வென்றார்.
    • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசை ஜோகோவிச் தோற்கடித்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை கிர்கியோஸ் 6-4 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதையடுத்து, விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • திருச்சி அணியின் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

    இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 77 ரன்களை குவித்தார்.
    • டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், ஜேசன் ராய் 27 ரன்னிலும், பிலிப் சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடிய மலான் பின்னர் அதிரடியில் இறங்கி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்து அவுட்டானார். மொயீன் அலி டக் அவுட்டானார்.

    லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    ×