search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் வீணானது - ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து
    X

    சதமடித்த சூர்யகுமார் யாதவ்

    சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் வீணானது - ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 215 ரன்களை குவித்தது.
    • இந்திய வீரர் சூர்யகுமார், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை குவித்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரோகித் சர்மா தலா 11 ரன்னில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார். மைதானம் முழுவதும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றது.

    Next Story
    ×