என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
- நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.
கோவை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
- திருப்பூர் அணி சார்பில் மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
- நெல்லை அணியின் ஈஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கோவை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணியின் துல்லியமான பந்துவீச்சில் திருப்பூர் அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.
நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆவார்.
- 298 பவுண்டரிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 49 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசினார். அவர் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் அவர் அடித்த பவுண்டரிகளால் புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 301 பவுண்டரிகளை அவர் அடித்துள்ளார். இதனால் டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அவர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி விட்டு (298 பவுண்டரிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் பால் ஸ்டெர்லிங் மொத்தம் 325 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் ரோகித் உள்ளார். விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்.
- இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
- புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.
பர்மிங்காம்:
இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ஸ்விங் முறை பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.
டி20 கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது தமக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியதில் ஆச்சரியமில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்
தாம் நேர்மறையாகவே சிந்திப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தமக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன் என்றும் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார்.
- முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா, ஜடேஜா அதிரடியால் 170 ரன்களை எடுத்தது.
- இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- இறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார்.
- முதல் செட்டை இழந்த எலினா அடுத்த இரு செட்களை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்தது.
- இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் கிலீசன் ரோகித், கோலி உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் இறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து இறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
- இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
- முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பர்மிங்காம்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், மாட் பார்கின்சன்.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- முதல் செட்டில் 21-17 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 9-21 என வென்றார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரனோய் மற்றும் ஹாங் காங் வீரரான லாங் அங்குஸ் மோதினர். முதல் செட்டில் 17-21 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 21-9 என வென்றார். மூன்றாவது செட்டை லாங் அங்குஸ் 21-17 என போராடி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.
- ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
- விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இடம் பெறாத கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த போட்டிக்கு திரும்பியுள்ளனர். இந்த போட்டிக்கு ஆடும் லெவன் எடுப்பதில் கடும் போட்டி நிலவும். விராட் கோலி, பும்ரா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார்கள். இதனால் டாப் ஆர்டரிலும் பந்து வீச்சாளர் பக்கமும் மாற்றம் இருக்கலாம்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கும் போது டி20 போட்டியில் இருந்து விராட் கோலியையும் நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 ஆடும் லெவனில் விளையாடுவதை விட பெஞ்சில்தான் அமர வேண்டும். 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும் என்றால் விராட் கோலியையும் டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும்.
விராட் கோலி பார்மில் இல்லை. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக்கூடாது.
நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
இவ்வாறு கபில் தேவ் காட்டமாக பேசியுள்ளார்.
விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் டி20 போட்டியில் இடம் பெறாத விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பால் ஸ்டிர்லிங்
டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார். அவர் 325 பவுண்டரிகள் அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 298 பவுண்டரிகள் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் இருவரும் 2 பவுண்டரிகள் விளாசினால் பால் ஸ்டிர்லிங் சாதனையுடன் இணைவார்கள்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா , அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்
- சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது.
- துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர்.
சென்னை:
ஸ்ரீராம் சிட்டி-சென்னை ஹாக்கி சங்க சூப்பர் டிவிசன் லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர். ஸ்டேட் வங்கி அணியில் எழில் அரசன் கோல் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது. துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர்.
இன்றைய ஆட்டங்களில் சாய்-எஸ்.டி.ஏ.டி , ஐ. சி. எப். -தெற்கு ரெயில்வே அணிகள் மோதுகின்றன.






