என் மலர்
டென்னிஸ்
X
விம்பிள்டன் - முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் எலினா ரிபாகினா
Byமாலை மலர்9 July 2022 9:21 PM IST
- இறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார்.
- முதல் செட்டை இழந்த எலினா அடுத்த இரு செட்களை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X