என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Tamizhans"

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • திருப்பூர் அணி சார்பில் மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
    • நெல்லை அணியின் ஈஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணியின் துல்லியமான பந்துவீச்சில் திருப்பூர் அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    ×