என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பர் டிவிஷன் ஹாக்கி"

    • சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது.
    • துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர்.

    சென்னை:

    ஸ்ரீராம் சிட்டி-சென்னை ஹாக்கி சங்க சூப்பர் டிவிசன் லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர். ஸ்டேட் வங்கி அணியில் எழில் அரசன் கோல் அடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக விளையாட்டு கவுன்சில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது. துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர்.

    இன்றைய ஆட்டங்களில் சாய்-எஸ்.டி.ஏ.டி , ஐ. சி. எப்.  -தெற்கு ரெயில்வே அணிகள் மோதுகின்றன.

    ×