என் மலர்
விளையாட்டு
- கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர்.
- தவான் மற்றும் ரோஹித் 111 இன்னிங்ஸ்களில் 4994 ரன்கள் குவித்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.
இதில், ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி சாதனை ஒன்றை படைக்கவுள்ளது. இதன்மூலம், தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள்.
முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி உள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான தொடக்க ஜோடிகளாக இருந்துள்ளனர்.
5000 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவை. தவான் மற்றும் ரோஹித் 111 இன்னிங்ஸ்களில் 4994 ரன்கள் குவித்துள்ளனர். கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ரோகித்-தவான் ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் 114 இன்னிங்ஸில் 5372 ரன்களும் 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடிகளான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 102 இன்னிங்ஸில் 5150 ரன்களும் எடுத்துள்ளனர்.
ரோஹித் மற்றும் தவானை விட அதிக சதம் அடித்த தொடக்க வீரர்களாக கங்குலி மற்றும் டெண்டுல்கர் மட்டுமே உள்ளனர்.
- ஓவல் மைதானத்தில் ஷிகர் தவான், அஜய் ஜடேஜா ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
- ஓவல் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட்டில் தோல்வியடைந்து தொடரை 2-2 என சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது சமி ஆகியோர் ஒருநாள் தொடரில் இணைகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
ஓவல் மைதானம் குறித்த தகவல்களை காண்போம்:-
உலகிலேயே பழமையான மைதானங்களில் ஒன்றான ஓவல் மைதானத்தில் கடந்த 1880 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 23000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 1973 முதல் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.
இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 30 போட்டிகளில் வென்றுள்ளன. 41 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.
இங்கு 49 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. 17 போட்டிகளில் தோற்றது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
இம்மைதானத்தில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக இம்மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.
இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. ஷிக்கர் தவான் : 443
2. சச்சின் டெண்டுல்கர் : 209
3. ரோகித் சர்மா : 199
இந்த மைதானத்தில் ஷிகர் தவான் (125) மற்றும் அஜய் ஜடேஜா (100*) ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள். இங்கு ஷிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கு தலா 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர்.
இம்மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற (5/36) எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 352/5, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக. குறைந்தபட்ச ஸ்கோர் 158 ஆல்-அவுட்.
பிட்ச் ரிப்போர்ட்:
இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் ஓவல் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அற்புதமாக சாதகமளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இங்கு காணப்படும் ஃப்ளாட்டான பிட்ச்சில் கிடைக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நம்பி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ஷாட்களை விளையாடி ரன்களை குவிக்கலாம். போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள்.
மிடில் ஓவர்களில் திறமையான சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இம்மைதானம் கை கொடுக்கலாம். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 254 ஆகும். மேலும் இப்போட்டி பகலிரவாக நடைபெறுவதாலும் இங்கு இதற்கு முன் சேசிங் செய்த அணிகள் அதிகம் வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
- இந்திய போட்டிகளின் போது மூத்த வீரர்கள் ஓய்வெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
- ஐ.பி.எல். போட்டியின் போது ஓய்வு எடுக்கவில்லை.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது.
இதில் 20 ஓவர் போட்டி தொடரில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் போட்டியிலும் ஓய்வு அளிக்கும்படி விராட் கோலி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மூத்த வீரர்கள் ஓய்வு எடுப்பதற்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய போட்டிகளின் போது மூத்த வீரர்கள் ஓய்வெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். ஐ.பி.எல். போட்டியின் போது ஓய்வு எடுக்கவில்லை.
ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது ஓய்வு எடுக்கிறீர்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஓய்வு பற்றி பேசாமல் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 20 ஓவர்கள் மட்டுமே உள்ளது. இது உங்கள் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. டெஸ்ட் போட்டிகளில் மனமும், உடலும் சோர்வடையும். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக பிரச்சினை இல்லை.
இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு மிகவும் பொதுவாகி விட்டது. இந்த ஓய்வு கொள்கையில் கிரிக்கெட் வாரியம் தலையிட வேண்டிய நேரம் இது. இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து 'ஏ' கிரேடு வீரர்களும் மிக சிறந்த ஒப்பந்தங்கள் பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் பணம் பெறுகிறார்கள். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் உங்களது உத்தரவாதங்களை குறைக்க வேண்டும்.
பின்னர் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் விளையாட விரும்பவில்லை என்கிற போது இந்திய அணிக்காக விளையாட விரும்பவில்லை என்று ஒருவரால் எப்படி கூற முடியும். இதற்காக ஓய்வு என்று கூறுகிறார்கள்.
இதனால் தான் இந்த கருத்தை நான் ஏற்கவில்லை என்றார்.
- லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சி ட்ரையான் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி ஸ்கிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக டாமி பியூமண்ட்- லம்ப் ஜோடி களமிறங்கியது. 1 ரன் எடுத்த நிலையில் டாமி பியூமண்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த சோபியா டங்க்லி 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
லம்ப்- நடாலி ஸ்கிவர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நடாலி ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை லம்ப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் முறையில் வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி 32.1 ஓவரில் 219 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
கோவை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து வருகிறது.
இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
நடைபெற்ற ஆட்டங்களில் நெல்லை அணியிடம் சூப்பர் ஓவரிலும், 2-வது ஆட்டத்தில் மதுரையிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.
திருச்சிக்கு எதிரான 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் சாய் கிஷோர், ஹரீஷ்குமார், சித்தார்த், சந்தீவ் வாரியர், அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 203 ரன் குவித்தது. இதனால் அந்த உத்வேகத்துடன் இன்று களம் இறங்கும் அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.
முதல் 2 ஆட்டத்தில் (திண்டுக்கல், மதுரைக்கு எதிராக) கோவை அணி தோற்றது. கடந்த இரண்டு லீக் ஆட்டத்தில் (சேலம், திருச்சி) வெற்றி பெற்றது.
அந்த அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சாய் சுதர்சன், சுரேஷ்குமார், அபிஷேக் தன்வார், விக்னேஷ், பாலு சூர்யா, அஜித் ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
கோவை அணி 3-வது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
- குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா இடம் பெற்றுள்ளது.
- இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் குரூப் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் குரூப் 'பி' பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, எஸ் மேக்னா, தனியா சப்னா பாட்டியா (விகீ), யாஸ்திகா பாட்டியா (விகீ), தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா. காத்திருப்பு: சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ், பூனம் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
- சேலம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
- மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.
ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார். இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
அந்த அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 15 ரன்களிலும் அபிஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரில் பெராரியோ 19 ரன்கள், கேப்டன் முருகன் அஸ்வின் 10 ரன்கள், ஜாஃபர் ஜமால் 13 ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக பிரனவ் குமார் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ராக்கி மற்றும் சரவணன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். சன்னி சந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை.
- டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
ஓவல்:
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இத் அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட்சி கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சதுர்வேதி, விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஆகியோர் 59 ரன்கள் சேர்த்தனர்.
கோவை:
6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.
- தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
- ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 17 ரன்னில் தோல்வியை தழுவியது.
ஏற்கனவே தொடரை கைப்பற்றிய காரணத்தால் டி20 உலகக்கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கில் சோதனை முயற்சியாக 3-வது போட்டியில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் பவுலர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்பளித்தார். அதில் ஹர்ஷல் படேல், பிஷ்னோய் தவிர எஞ்சிய பவுலர்கள் சொதப்பினாலும் கடைசியில் இந்தியா போராடி தான் தோல்வியடைந்தது.
முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பதிவு செய்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை ரோகித் சமன் செய்திருந்திருப்பார்.

அந்த சாதனையை ரோகித் தவறவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
1. ரிக்கி பாண்டிங் : 20 (2008)
2. ரோகித் சர்மா : 19 (2019/22)
3. ரிக்கி பாண்டிங் : 16 (2006/07)
- இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
- தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது.
காலே:
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
லபுசேன் சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர அந்த அணி முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 84 ரன்களும் ,மேத்யூஸ் 6 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெண்டிஸ் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் அரைசதம் கடந்த நிலையில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சண்டிமால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3-வது நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இலங்கை அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 118 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரமேஷ் மெண்டீஸ் 29 ரன்னிலும் தீக்ஷனா 10 ரன்னிலும் ஜெயசூர்யா 0 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் இரட்டை சதம் விளாசினார். கடைசி விக்கெட்டாக ரஜிதா 0 ரன்னில் அவுட் ஆனார். சண்டிமால் 206 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. வார்னர் 24, கவாஜா 29, லபுசன் 32, ஸ்மித் 0, ஹெட் 5, கிரீன் 23, ஸ்டார்க் 0, கம்மின்ஸ் 16, நாதன் லயன் 5, ஸ்வெப்சன் 0 என வரிசைக்கட்டி வெளியேறினர். 151 ரன்கள் எடுப்பதற்க்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக லபுசன் 32 ரன்கள் எடுத்திருந்தார்.
இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை அள்ளினார். சிறப்பாக பந்து வீசிய ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர் நாயகன் விருது தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இலங்கை அணி வருகிற 16-ந் தேதி பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
- சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
- சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சூர்ய குமாரின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். நான்காவது இடத்தில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூர்யகுமார் படைத்துள்ளார்.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.






