என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.
லண்டன்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக (80 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 இந்தியர்கள் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (வங்காளதேசத்துக்கு எதிராக 2014) கைப்பற்றி உள்ளார். கும்பிளே (6-12), பும்ரா (6-19), ஆஷிஷ் நெஹரா (6-23), குல்தீப் யாதவ் (6-25), முரளிகார்த்திக் (6-27), அஜித் அகர்கர் (6-42), யுஸ்வேந்திர சாஹல் (6-42), அமித் மிஸ்ரா (6-48), ஸ்ரீசாந்த் (6-55), ஆஷிஷ் நெஹரா (6-59) ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
- நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
- எங்களின் பல வெற்றிக்கு ஜெகதீசனின் பங்களிப்பு இருந்துள்ளது.
கோவை:
டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது வெற்றியை பெற்றது.
கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.
கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் தன்வர் 12 பந்தில் 28 ரன்னும் (2பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சாய் கிஷோர் 2 விக்கெட்டும் , சித்தார்த், அலெக்சாண்டர், ஹரீஷ் குமார், சோனு யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என். ஜெகதீசன் 51 பந்தில் 75 ரன்னும் ( 6 பவுண்டரி, 3 சிக்சர்) , சாய் கிஷோர் 33 பந்தில் 48 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டும், அஜித்ராம், பாலு சூர்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-
சிறப்பான பேட்டிங் மூலம் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் பல துறைகளில் இன்னும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது. ஜெகதீசன் எங்கள் அணியின் தூணாக செயல்படுகிறார். எங்களின் பல வெற்றிக்கு அவரது பங்களிப்பு இருந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சாய்கிஷோர் கூறும்போது, 'இந்த வெற்றியை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சீசனில் எனது பேட்டிங் மேம்பட்டு இருக்கிறது. எனது பயிற்சியாளர் பிரசன்னாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
கோவை கிங்ஸ் 3-வது தோல்வியை தழுவியது. இந்த அணி கேப்டன் ஷாருக்கான் கூறும்போது, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்து வீச்சில் போதுமான திறனை வெளிப்படுத்த தவறிவிட்டோம்.
இந்த ஆடுகளத்தில் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களம் இறக்கி இருந்தால் நிலமை மாறி இருக்கலாம் என்றார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது போட்டியிடும் திண்டுக்கல் டிராகன்சை 16-ந் தேதி எதிர்கொள்கிறது. கோவை அணி திருப்பூர் தமிழன்சை அதே தினத்தில் சந்திக்கிறது.
இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி 2-வது வெற்றிக்காகவும், சேலம் அணி முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவல்:
இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சி, 5 கிலோ மீட்டர் நடைபெறும்.
- 28-ஆம் தேதி 10 கிலோமீட்டர், முழு மாரத்தான போட்டி நடைபெறுகிறது.
தெலுங்கானாமாநிலம் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில், 5 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி 10 கிலோமீட்டர், அரை மாரத்தான் மற்றும் முழு மாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி இந்த மாரத்தான் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது.
இந்நிலையில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டிகளுக்கான லோகோ, டி.ஷர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புகழ் பெற்ற பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை நிகத் ஜரீன் காணொலி வாயிலாக இதில் கலந்து கொண்டார்.
- சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
- கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.
ராஞ்சி:
சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார்.

ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.
- முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
- சேப்பாக் அணியில் நாராயணன் ஜெகதீசன் 75 ரன்களை குவித்தார்.
6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 9 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராதா கிருஷ்ணன் 8 ரன்னுடனும், சசிதேவ் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் கிஷோர் - நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிபட்சமாக நாராயணன் ஜெகதீசன் 51 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். சாய் கிஷோர் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர்.
தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
- கேப்டன் ஷாருக் கான் 28 பந்தில் 51 ரன்களை குவித்தார்.
கோவை:
6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 171 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.
தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார்.
- 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட் 2 பந்துகள் மட்டுமே சந்தித்து பும்ரா பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் முகமது சமி பந்து வீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 பவுண்டரிகள் அடுத்தடுத்து விளாசினார். நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 20 பந்தில் 7 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
- நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- முன்னதாக அவர் டெல்லி மாநில தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிர்ண்ட் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
புதுடெல்லி:
இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி தாகர் என்பவர், தனது 94 வயதில் வெளிநாட்டிற்கு சென்று, விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடி 'தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை' வென்று சாதித்துள்ளார். பின்லாந்தில் நடந்த 'உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய அரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று, 94 வயதில் உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.
பின்லாந்தின் தம்பேரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இந்நிலையில் டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவர் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து 94 வயதான பகவானி தேவி தாகர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேறொரு நாட்டில் பதக்கங்களை வென்று என் நாட்டை பெருமைப்படுத்தியிருக்கிறேன்" என்றார்.
முன்னதாக அவர் டெல்லி மாநில தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிர்ண்ட் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து சென்னையில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
- டி20 தொடரை வென்றதுபோல் ஒரு நாள் போட்டியிலும் வெல்ல இந்திய அணி முயற்சிக்கும்.
ஓவல்:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்குகிறது.
இரு அணி வீரர்கள் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, டாப்லே.






