என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பும்ராவும், முகமது ஷமியும் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை பதம் பார்க்க ஆயத்தமாக உள்ளனர்.
    • முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே இங்கிலாந்தின்ன் ஸ்கோர் அமையும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் ஓவலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷமான பந்து வீச்சு சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வெறும் 110 ரன்னில் 'சரண்' அடைந்தது. 'ஸ்விங்' தாக்குலில் அட்டகாசப்படுத்திய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதில் ஜாசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகியோரை டக்-அவுட்டில் வீழ்த்தியதும் அடங்கும். இந்திய அணி எளிய இலக்கை 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து அசத்தியது. தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை சரி செய்து அதற்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடிக்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

    மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் அவசரகதியில் மட்டையை சுழட்டுவதை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்கள். முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும். அதே சமயம் ஓவலில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். பும்ராவும், முகமது ஷமியும் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை பதம் பார்க்க ஆயத்தமாக உள்ளனர்.

    • பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார்.
    • நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை என தோல்வி குறித்து சேலம் அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.

    கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேலம் அணிக்கு 136 ரன் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது.

    கேப்டன் அணிருதா 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாப்னா 29 ரன்னும், அரவிந்த் 25 ரன்னும் எடுத்தனர். டாரியல் பெராரியோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    ரவி கார்த்திகேயன் அதிகபட்சமாக 25 பந்தில் 36 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மோகன் பிரசாத் 3 விக்கெட்டும் எம்.முகமது, அரவிந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    திருப்பூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றிக்காக பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் மழையால் பிட்சின் தன்மை சற்று மாறியதால் 135 ரன்களே எடுக்க முடிந்தது. இது நல்ல ஸ்கோர் என்று கருதினோம். அதற்கு ஏற்ற வகையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் ஸ்பார்டன்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறும்போது நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • ஏற்கனவே முதல் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்று இருந்தது.
    • வங்காளதேசம் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

    கயானா:

    வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 35 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது.

    கீமோ பவுல் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும், நசும் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய வங்காளதேசம் 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தமீம் இக்பால் 50 ரன்னும், லிட்டன் தாஸ் 32 ரன்னும் எடுத்தனர். ஏற்கனவே முதல் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்று இருந்தது.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை கைப்பற்றி இருந்தது.

    • இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 இரண்டு கோல்கள் அடித்தார்.
    • 9-12வது இடங்களுக்கான போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

    எஸ்டாடி டெர்ரசா:

    15-வது மகளிர் உலக கோப்பை ஆக்கிப் போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன.  ஸ்பெயினின் எஸ்டாடி டெர்ரசா நகரில் நேற்று நடைபெற்ற 9-12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.

    இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 கோல்களும், தீப் கிரேஸ் எக்கா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் யூ அசாய் ஒரு கோல் போட்டார்.

    முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. 

    • சேலம் அணி 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
    • திருப்பூர் வீரர் மோகன் பிரசாத் 3 விக்கெட்கள் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். அத்துடன் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர்.

    சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

    அந்த அணியின் தொடக்க வீரர் கோபிநாத் 5 ரன்னுடன் வெளியேறினார். கவின் 14 ரன்னும்,கணேஷ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ரவி கார்த்திகேயன் 36 ரன்கள் அடித்தார். சேலம் அணி 19.2 ஓவர் முடிவில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதனையடுத்து திருப்பூர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.திருப்பூர் அணி சார்பில் அதிபட்சமாக மோகன் பிரசாத் 3 விக்கெட்களும், முகமது அரவிந்த் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். 

    • திருப்பூர் அணி 6.4 ஓவர்கள் ஆடிய நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 6.4 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், தொடர்ந்து ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சிக்கந்த அனுருதா 32 ரன்கள் எடுத்தார். அத்துடன் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மான் பஃப்னா 29 ரன்கள், அரவிந்த் 25 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி தரப்பில் டேரில் பெராரியோ 2 விக்கெட் எடுத்தார். கணேசன் பெரியசாமி, கிஷோர், ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது.

    • விக்டர் மோங்கில் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.
    • மேலும் விக்டர் மோங்கில் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

    சென்னை:

    இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணி கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ் டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்தது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.

    இந்த நிலையில் தற்போது அந்த அணி ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.

    மேலும் இவர் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன.
    • திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -சேலம் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி ,2 தோல்வி அடைந்துள்ளது. சேலம் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்துள்ளது.

    • பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், நோர்க்கியா ஆகிய இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி டி20 போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவ் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். அவர் 44 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    புவனேஸ்வர் குமார்

    புவனேஸ்வர் குமார்

    இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10-ல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.

    • இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 4 இடங்கள் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியை சேர்ந்த போல்ட் 712 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 681 புள்ளிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 3-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 4 இடங்கள் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    • இருவரும் இணைந்து 5,108 ரன் எடுத்து உள்ளனர்.
    • ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது ஜோடி ரோகித் சர்மா-தவான் ஆவார்கள்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

    பும்ரா 19 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட் டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 58 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்னும், ஷிகர் தவான் 54 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    ரோகித்சர்மா- தவான் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன் எடுத்து சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 5,108 ரன் எடுத்து உள்ளனர். 112 இன்னிங்சில் இந்த ரன்னை தொட்டுள்ளனர். ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது ஜோடி ரோகித் சர்மா-தவான் ஆவார்கள்.

    தெண்டுல்கர்-கங்குலி 6,609 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட்-ஹைடன் (ஆஸ்திரேலியா) ஜோடி 5,379 ரன்னுடன் 2-வது இடத்திலும், கிரீனிட்ஜ்- ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஜோடி 5,150 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 

    • மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்ததால் இந்திய ரசிகர்கள் அவரை வாட்டி எடுத்தனர். முதலாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த ஆட்டம் குறித்து அவர் பேசியதாவது:-

    இங்கிலாந்து அணியில் தற்போது ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்களை அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தபடி அந்த மூவரில் பேர்ஸ்டோ 7 ரன்களை மட்டுமே அடிக்க ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    இப்படி அதிரடியான வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்த வேளையில் நேற்று இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டு சொதப்பியதால் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். 

    ×