என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணியின் ஜெயசூரியா 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான டெஸ்ட் அணியை இலங்கை அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட்டில் இலங்கை அணி வரலாற்று வெற்றி பெற்றது. அந்த டெஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக ஜெயசூரியா 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் போட்டியிலேயே அவரின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை திணறடித்தது.

    இதனால் இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர் கொள்ளும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை தற்போது மூன்றாவது இடத்திலும் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி:

    கருணாரத்னே (கேப்டன்), பதும் நிசங்கா, ஓஷத பெர்னாண்டோ, மேத்யூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், ரமேஷ் மெண்டிஸ், தீக்க்ஷனா, கசுன் ரஜிதா, விஷ்வா பெர்னாண்டோ, அஜிசா பெர்னாண்டோ, டில்சன் மதுஷங்க, பிரபாத் ஜெயசூரியா, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே.

    • நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது.
    • திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை உறுதி செய்ய நெல்லை அணி தீவிரம் காட்டும்.

    ரஹில் ஷா தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    • இங்கிலாந்தின் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • இந்தியா சார்பில் ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

    லார்ட்ஸ்:

    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தவான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா 29 ரன், ஷமி 23 ரன் எடுத்தனர்.

    இறுதியில், இந்தியா 146 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் தற்போது 1-1என சமனில் உள்ளது. இறுதி மற்றும் 3வது ஒருநாள் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வியட்நாம் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • இதேபோல், இந்தியாவின் சாய்னா நேவால் சீன வீராங்கனையை வென்றார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹூ பிங் ஜியாவோவுடன் மோதினார். இதில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் துய் லின் நுயெனுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார்.
    • இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    லாட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார். டேவிட் வில்லே 41 ரன்கள், ஜேனி பேர்ஸ்டோ 38 ரன்கள், லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்கள், ஜேசன் ராய் 23 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
    • விராட் கோலி, பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

    இந்திய அணி:-

    ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், ஆர் பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். 

    • சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ளார்.
    • லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக புஜாரா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    2022-ம் ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப்பின் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூலை மாதம் 11-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சசெக்ஸ் அணியில் தான் இந்திய அணி வீரர் புஜாரா விளையாடுகிறார்.

    அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 588 ரன்கள் சேர்த்தது. புஜாரா 46 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து லீசெஸ்டர்ஷைர் முதல் இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 529 ரன்கள் எடுத்தது. இதில் 3 பேர் சதமும் ரிஷி படேல் 99 ரன்களும் அடித்திருந்தனர். கொலின் அக்கர்மேன் 167 ரன்னிலும் முல்டர் 129 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த போட்டியில் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா லெக் ஸ்பின்னராக மாறினார். ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர் 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.


    சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 41.5 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை புஜாரா வீழ்த்தியுள்ளார். சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சுழற்பந்து வீசியது வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா-இங்கிலாந்து அணி சிக்சரால் காயமடைந்த சிறுமிக்கு பரிசுகள் வழங்கியது.
    • ரோகித் சர்மா அடித்த சிக்சரால் காயமடைந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 12-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி பும்ரா, சமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 110 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


    இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர் 6 பவுண்டரி அடங்கும். இவர் அடித்த சிக்சரில் 6 வயது சிறுமி காயமடைந்தார். அதனால் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன் பின் இங்கிலாந்து அணியின் மருத்துவக்குழு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.


    போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அந்த குழந்தையை சந்தித்து சாக்லேட் வழங்கியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி அவருக்கு இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான ஜெர்சியை பரிசாக வழங்கியது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது.
    • கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடினார்.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

    20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் கோப்பையை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்தார். இது குறித்து கங்குலி கூறியதாவது:- இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்குகிறார்கள். இந்த முறை நான் அதைப் பெற்றேன் என்றார்.

    முன்னதாக கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணியிடம் இழந்த போதிலும், டி-20 தொடரை போல, இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • விராட் கோலி 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
    • டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 33 வயதான அவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு சதம் அடித்து இருந்தார்.

    தற்போது விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகமே.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார். அவர் தனது வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    விராட் கோலி தற்போது சவாலான நிலையில் உள்ளார். இது அவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    அவர் தனது வழியை கண்டறிந்து வெற்றி பெற வேண்டும். 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே மீண்டும் நல்ல நிலைககு வர இயலும்.

    விளையாட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஒவ்வொரு வருக்கும் நடந்துள்ளது. டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அது போலதான் தற்போது விராட் கோலிக்கு நடந்துள்ளது.

    எதிர்கால வீரர்களுக்கும் இது மாதிரியான நிலை ஏற்படும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதனால் விராட் கோலி தனது குறைபாட்டை அறிந்து தனக்குரிய விளையாட்டை ஆட வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஒரு ரன்னும், 3-வது போட்டியில் 11 ரன்னும் எடுத்தார். முன்னதாக நடந்த 5-வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 31 ரன்களே எடுத்தார்.

    விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும். இல்லையென்றால் அவர் இடம் பெறுவது கடினமாகிவிடும். உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது.

    கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அவருக்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார்.
    • இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் ருமேலி தார் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த பெண்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    38 வயதான ருமேலி தார் 2003 முதல் 2018 வரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தார். அவர் நான்கு வருட அனுபவத்துடன் பிசிசிஐ லெவல் 2 சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக உள்ளார். 2003-ல் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் 2018-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் ஆடினார். 2009 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையாக இருந்தார்.

    இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 961 ரன்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களையும் குவித்துள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் 29.5 சராசரியுடன் 236 ரன்களை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த், காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
    • இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 66-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற நேர்செட்டில் 12-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 21-17, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீரர் ஸ்ரீகாந்தை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. ஸ்ரீகாந்தை போல் மற்ற இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

    ×