என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து மரியா ஷரபோவா ஓய்வு பெற்றார்.
    • 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    தற்போது 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    அதில் தனது கணவர் கில்கெஸ் மற்றும் பிறந்து 2 வாரங்களான குழந்தை தியோடர் ஆகியோரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.
    • போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் உள்ளது.

    கொழும்பு:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்த போட்டி அங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை இலங்கையில் ஆசிய கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று இன்னும் உறுதியாக நம்புகிறோம். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.

    இப்போது பாகிஸ்தான் அணி வந்துள்ளது. போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை' என்றார். இந்த போட்டியை இலங்கையிலேயே நடத்த வேண்டும். அதற்கு தங்களது முழுமையான ஆதரவு உண்டு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு உறுதி அளித்துள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 360 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 359 ரன் எடுத்து மிரட்டியது.

    டப்ளின்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். ஹென்றி நிகோலஸ் 79 ரன்னும், பிலிப்ஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிரிங் 120 ரன்னும், ஹாரி டெக்டர் 108 ரன்னும் குவித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்களும் விடாது போராடினர்.

    கடைசி 2 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி போராடி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன்னில் தோற்றது.

    இறுதியில், அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 359 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

    ஆட்டநாயகன் விருது மார்ட்டின் குப்திலுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெலுக்கும் வழங்கப்பட்டது.

    எளிதில் வீழ்ந்து விடும் என நினைத்த நியூசிலாந்து அணிக்கு அயர்லாந்து வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறடித்தனர்.

    • திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்.

    எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆதித்ய கணேஷ் 13 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.  

    • முதலில் விளையாடிய நெல்லை அணியில் பாபா அபராஜித் 92 அடித்தார்.
    • திருச்சி அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது நெல்லை.

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

    நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது. இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்குகிறது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.
    • காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    • குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினர் இல்லை.
    • தனியார் மருத்துவமனையில் 2 நாட்களாக சுயநினைவை இழந்த நிலையில் நிகில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை விமலா-சுரேஷ் தம்பதியின் இளைய மகனான நிகில்(வயது 23) என்பவர் கலந்துகொண்டார்.

    கர்நாடகா மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகில் முகத்தில் வேகமாக ஒரு குத்துவிட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார். நிகில் முகத்தில் குத்திய வீரர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட கீழே விழுந்த நிகில், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

    அவரை தூக்க முயன்ற நடுவர் நிகில் மயங்கி சுய நினைவில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிகிலை போட்டி ஏற்பட்டாளர்கள் பெங்களூரு நகராபவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 நாட்களாக சுயநினைவை இழந்த நிலையில் நிகில் சிகிச்சை பெற்று வந்தார்.

    எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிகிலின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். நிகிலின் தந்தை சுரேஷ் அங்குள்ள ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் போட்டியை ஏற்பாடு செய்திருந்த நவீன் ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதன்பேரில், நவீன் ரவிசங்கர் மீது ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து நிகிலின் பெற்றோர் கூறுகையில், "குத்துச்சண்டை அரங்கில் உள்ள தரையில் உள்ள விரிப்பு மிகவும் மெல்லியதாக இருந்தது. முகத்தில் அடிபட்டு கீழே விழுபவருக்கு தரையில்பட்டு கூடுதல் காயங்கள் ஏற்படும். போட்டி ஏற்பாட்டாளர்கள் முதலுதவியை வழங்கவில்லை.

    குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினரும் இல்லை. ஆக்சிஜன் மற்றும் ஸ்ட்ரெட்சர் வசதிகளும் அங்கு இல்லை." என்று குற்றம்சாட்டினார். இதனிடையே போட்டி ஏற்பட்டாளர் நவீன் ரவி ஷங்கர் இந்த விபத்து நடைபெற்றபோது தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகிவிட்டார்.

    அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் குத்து சண்டை போட்டியின் போது நிகிலை எதிராளி முகத்தில் குத்துவது மற்றும் அவர் கீழே சரிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
    • வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதிப்படி தனது மாதிரியை பரிசோதனைக்கு ஷாஹிதுல் இஸ்லாம் வழங்கியிருந்தார். அதில் தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு 10 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி. ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தின் பிரிவு 2.1-யை மீறியதற்காக வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.

    அவர் கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

    • யுஸ்வேந்திர சாஹல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.

    லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 1983-ம் ஆண்டு 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இந்திய வீரர்களின் சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக ஆஷிஸ் நெக்ரா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும்.
    • கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும்.

    லண்டன்:

    இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறும்போது:-

    டெண்டுல்கரிடம் கோலி பேசி ஆலோசனை பெற வேண்டும். அவரை கோலி மிகவும் மதிக்கிறார். அதே போல் யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும். அவர்கள் இருவரும் கோலிக்கு உதவ முடியும். கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும் என்றார்.

    • இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டோப்லே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லாட்ஸ் மைதானத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் 5 விக்கெட்டுகள் மேல் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டேரன் கோஃப் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை டோப்லே முறியடித்துள்ளார்.

    டேரன் கோஃப்

    டேரன் கோஃப்

    இவர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களில் டோப்லே முதல் இடத்தை பிடித்தார்.

    இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கோலிங்வுட் வங்காளதேசத்திற்கு எதிராக 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். அவரை டோப்லே பின்னுக்கு தள்ளியுள்ளார். இவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வரிசையில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் கிறிஸ் வோக்ஸ் உள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 45, 47 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

    • விராட் கோலிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்தார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 16 ரன்கள் எடுத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க சிரமப்பட்டு வருவதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அதே வேளையில் அவருக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் கோலிக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, "இதுவும் கடந்து போகும். வலுவாக இருங்கள் விராட் கோலி" என்று தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 16 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×