என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இறுதிப்போட்டியில் சீனாவின் வாங் ஜி யி- பி.வி.சிந்து மோதினர்
    • பதிலடி கொடுத்த சீன வீராங்கனை 2ம் செட்டை வசமாக்கினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டியின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் சிறப்பான சில ஷாட்களை அடித்து ஆட்டத்தை தன் வசமாக்கினார். அடுத்தடுத்து 11 புள்ளிகள் பெற்ற அவர் 11-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னரும் தனது நிலையை தக்க வைத்த சிந்து, முதல் செட்டை எளிதில் வென்றார். இரண்டாம் செட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை அந்த செட்டை வசமாக்கினார்.

    அதன்பின் சுதாரித்து ஆடிய சிந்து, கடுமையான போராட்டத்திற்கு பிறகு 3ம் செட்டை வென்றார். இப்போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு மூன்றாவது கோப்பையை வென்றிருக்கிறார். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றிருந்தார்.

    • விராட் கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார்.
    • இங்கிலாந்து தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.. இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

    விராட் கோலிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளது, அதன் அருகில் கோலி அமர்ந்திருக்கிறார்.

    சிறகுகளுக்கு மேல், ஒருவேளை நான் கீழே விழுந்தால்? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழே, ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா? என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கயானா:

    வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் வென்றது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த நிகோலஸ் பூரன் 73 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்ளாம் 5 விக்கெட்டும், நசும் அகமது, முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தமிம் இக்பால் 34 ரன் எடுத்தார். விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

    இறுதியில் வங்காளதேசம் 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது தஜுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும் வழங்கப்பட்டது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கெல்லே:

    பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 21 ரன்னில் நடையைக் கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோ 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். 76 ரன்னில் அவர் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

    • திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.
    • சேப்பாக் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 44 ரன்கள் அடித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடின.

    டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. அந்த அணி கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார்.

    மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான கவுசிக் காந்தி 44 ரன்கள் குவித்தார். ஜெகதீசன் 31 ரன்கள் அடித்தார். பின்னர் சசிதேவ்-சோனுயாதவ் ஜோடி சேர்ந்தனர். சோனு 26 ரன்கள் அடித்தார். சசிதேவ் 15 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ராஜகோபால் சதீஷ் 8 ரன்னுடன் வெளியேறினார். 9.2 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 138 ரன்கள் அடித்தது.
    • திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும்  21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வைத்தியா 2 ரன்னுக்கும், நிஷாந்த் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார். ஹரிகரன் 6 ரன்னுக்கும் மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கி விளையாட உள்ளது. 

    • முதலில் விளையாடிய திருப்பூர் அணி 157 ரன்கள் எடுத்திருந்தது.
    • கோவை வீரர் சுரேஷ்குமார் 44 பந்துகளில் 83 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய 20 வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் அரவிந்த் 27 ரன்னுக்கும், ஸ்ரீகாந்த் அனிருத்தா 39 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ராகேஜா 20 ரன்கள், ராஜ்குமார் 14 ரன்கள் எடுத்து நிலையில் வெளியேறினர். மான் 20 ரன்னும், அஸ்வின் 10 ரன் உடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கோவை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னுடன் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ்குமாரும், சாய்சுதர்சனும், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    44 பந்துகளை எதிர்கொண்ட சுரேஷ்குமார் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். சாய் சுதர்சன் 41 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை அணி 15.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • விராட் கோலி போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்.
    • விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019-ல் சதமடித்திருந்தார்.

    அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆனார்.

    எத்தனை நாட்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று கடுமையாக விமர்சித்த கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.

    விராட் கோலி குறித்து கபில் தேவ் கூறியதாவது:-

    விராட் கோலி போன்ற பெரிய வீரரை நீக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர் மிகப்பெரிய வீரர். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக நீங்கள் கூறியிருந்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் அவரைப்போன்ற வீரரை எப்படி பார்முக்கு திரும்ப வைக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகும்.

    தனித்துவம் நிறைந்த வீரரான அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து அதிக போட்டிகளில் விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் சரியாக செயல்படவில்லையெனில் தேர்வுக் குழுவினர் அவர்களின் முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தெரிவித்தார்.

    விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.

    அவரைப் போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரை நீக்கினாலும் ஓய்வு கொடுத்தாலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.

    அதற்காக ரஞ்சி கோப்பை அல்லது வேறு ஏதேனும் தொடர்களில் பெரிய அளவில் ரன்களைக் குவித்தால் அது அவரின் தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும். மேலும் சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் அதுதான் வித்தியாசமாகும். மிகச்சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இத்தனை நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் அவர் ஃபார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் எடுத்துகொள்வது கவனிக்க வேண்டியுள்ளது.

    விராட் கோலி ஓய்வெடுத்தாலும் நீக்கப்பட்டாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அவரைப் போன்ற நல்ல வீரர் ஃபார்முக்கு திரும்ப ஒரு சிறந்த இன்னிங்ஸ் போதுமானது. இருப்பினும் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்காக நாம் 2 வருடங்களாக காத்திருக்கிறோம் என்று ஆதரவு கலந்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    • கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. பும்ராவின் அபாரமான பந்து வீச்சும், ரோகித்சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும் எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.

    ஆனால் 2-வது போட்டியில் இந்திய வீரர்கள் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 247 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 146 ரன் வித்தியாசத்தில் சுருண்டு 100 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது.

    இதில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டயா, ஜடேஜா, ரோகித்சர்மா, தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமாகும்.

    முதல் ஆட்டத்தில் மோசமாக ஆடிய பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அதில் இருந்து மீண்டு 2-வது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வேட்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.

    கடந்த போட்டியில் இந்தியாவின் சரிவுக்கு வேகப்பந்து வீரர் ரீஸ் டாப்லே காரணமாக இருந்தார். அவர் நாளைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக திகழ்வார்.

    கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 105 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 56-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிசன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.
    • உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன.

    புலவாயோ:

    8-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி 'டாப் 11' அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன.

    எஞ்சிய 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.

    இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன. ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது.

    உலகக்கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர்-12)விளையாடும். முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.

    • அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.
    • பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகாமியை வீழ்த்தினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜி யி, 21-14, 21-14 என்ற செட்கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் வாங் ஜி யி- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபனில் இன்னும் ஒரு போட்டியில் (இறுதிப்போட்டி) வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் சூப்பர் 500 பட்டத்தை வெல்வார்.

    • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை இந்தியாவுடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்.

    இந்தியாவுடானான தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் தனது புனித யாத்திரை இடைவேளைக்குப் பிறகு அணியில் இணைய உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இவர் இடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம் பெறாத பேர்ஸ்டோவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, பிரைடன் கார்ஸ், சாம் கரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

    டி20 அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

    ×