என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார்.
    • நம்பர் 1 வீராங்கனையாகி இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும்.

    புதுடெல்லி:

    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். தரவரிசை சுற்றுக்கு நடைபெற்ற தகுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்றார்.

    தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளி வென்றார்.

    இதுகுறித்து அஞ்சும் முட்கில் கூறியதாவது:-

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்தது. அங்கு கிடைத்த அனுபவம் எனக்கு இந்தப் போட்டியில் உதவியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வழக்கமான பயிற்சிக்குத் திரும்ப நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. நம்பர் 1 வீராங்கனையாகி இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும். முதல் முறையாக நான் நம்பர் ஒன் வீராங்கனையாகி இருக்கிறேன். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார். இதனிடையே, 50 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் டோனி, அசாரூதின் ஆகியோரின் சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
    • இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் புதிய சாதனை பதிவாகி உள்ளது.

    இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை 1990-ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. அதனையடுத்து 2014-ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் ஒருநாள் தொடர் கைப்பற்றப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் டோனி, அசாரூதின் ஆகியோரின் சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    • இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.
    • கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் என்ற இலக்கினை 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஐந்து விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    ஹார்டிக் பாண்டியா தொடர் நாயகனாகவும், ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வந்த போது ஒரு அணியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது. ஆனால் இம்முறை நாங்கள் டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்தில் எங்களது டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் ஹார்டிக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து எங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

    அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது மிக முக்கிய நபராக மாறி உள்ளார். அதே வேளையில் ஹர்த்திக் பாண்டியாவும் தற்போது பந்து வீச்சில் தனது அசத்தலான செயல்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார், ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்கும் எங்களது வீக்னஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    ஆனாலும் ஒரு தரமான அணி எப்படி வெற்றியை பெறும் என்பதை இந்திய அணி செய்து காண்பித்துள்ளது. இது நம்முடைய பலம் தான். இந்திய அணியில் தற்போது உள்ள இந்த பலத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அதன்படி இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார்.
    • ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார். அதே நேரத்தில் ஆஷ்டன் அகர், சீன் அபோட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் மற்றும் மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றன.

    இதுவரை 21 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி , ஒரு தோல்வியுடன் 8 புள்ளியும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி யுடன் 6 புள்ளியும் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் (2 வெற்றி, 4 தோல்வி), திருப்பூர் தமிழன்ஸ் (2 வெற்றி, 3 தோல்வி) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளி (1 வெற்றி, 4 தோல்வி) பெற்றுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 19-ந் தேதி ) தொடங்குகிறது. கோவையை போல சேலத்திலும் முதல் முறையாக டி .என். பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சேலத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணி சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், சசிதேவ், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    4 ஆட்டத்தில் தோல்வி அடைந்த சேலம் ஸ்பார்டன்ஸ் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலத்தை தரும் என்று அந்த அணி நம்பிக்கையில் இருக்கிறது.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார்.
    • வங்காள தேசம் அணிக்கு எதிரான தொடரில் ஹோல்டர் இடம் பெறவில்லை.

    இங்கிலாந்தில் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்தாக 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் ஹோல்டர் மீண்டும் இணைகிறார். வங்காள தேசம் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:-

    நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ்.

    வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.

    • இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன்.
    • இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

    மான்செஸ்டரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர் ), ஜேசன் ராய் 31 பந்தில் 41 ரன்னும் ( 7 பவுண்டரி ) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும் , முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரிஷப்பண்ட் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது. ரிஷப்பண்ட் 113 பந்தில் 125 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்ட்யா 55 பந்தில் 71 ரன் (10 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது முக்கியமான தாகும்.

    ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், கார்சே, ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்னில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது ஒரு நாள் தொடரையும் வென்று முத்திரை பதித்தது.

    ஒருநாள் தொடரை வெல்ல காரணமாக இருந்த ரிஷப்பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்து இருக்கிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். களத்தில் இருந்த போது பந்தில் மட்டுமே எனது கவனம் இருந்தது. இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். அதிகமான போட்டிகளில் விளையாடும் போதுதான் அனுபவம் கிடைக்கிறது.

    இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. எனவே இங்கிலாந்தை 259 ரன்னில் ஆல் அவுட் செய்ததற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன். இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    இதற்கிடையே, 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரின் ஓல்டுடிராப்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், ஆட்ட நாயகன் விருதையும் ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    ஒருநாள் போட்டியின் தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியா கைப்பற்றினார்.

    • பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.

    கெல்லே:

    பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், நசீம் ஷா ஜோடி 10-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார்.

    பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித்சர்மா 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் ஒரு ரன்னுடன் வெளியேற, கோலி 17 ரன் அடித்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்னுக்கு அவுட்டானார்.

    எனினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது. பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பண்ட், சதம் அடித்தார்.

    42 வது ஓவரில் பண்ட் 21 ரன்களை குவித்தார். இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்த பண்ட் கடைசிவரை களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 7 ரன் அடித்து களத்தில் நின்றார்.

    இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
    • திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனையடுத்து பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பி.வி.சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: தனது முதல் சிங்கப்பூர் ஓப்பன் வெற்றியைப் பதிவுசெய்துள்ள நமது ஊக்கமிகு இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்து அவர்களுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோடும் உத்வேகத்தோடும் பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார்.
    • இந்தியா சார்பில் பாண்ட்யா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்

    .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார். பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது

    ×