என் மலர்
விளையாட்டு
- 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.
- வங்காளதேச அணிக்கு எதிராக டோனி இதே மாதிரி ஸ்டெம்பிங் செய்திருப்பார்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது.
4 ரன்கள் முன்னிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்தது. 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடைசி நாளான இன்று 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் அணி வெற்றியின் விழும்பில் உள்ளது.

2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இலங்கை வீரர் டிக்வெல்லா ஸ்டெம்பிங் செய்த ஸ்டைல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி மாதிரி இருந்தது. வங்காளதேச அணிக்கு எதிராக டோனி இதே மாதிரி ஸ்டெம்பிங் செய்திருப்பார். இந்த ஸ்டெம்பிங்கை பார்த்த ரசிகர்கள் டோனி ஸ்டைலில் உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
- நாங்கள் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்.
- விராட் கோலியுடன் ஐ.பி.எல்.லில் பெங்களுரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விராட் கோலி இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஓய்வா? அல்லது நீக்கமா? என்ற விவாதம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் விராட் கோலிக்கு விக்கெட் கீப்பரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் ரன் குவித்துள்ளார். தற்போது அவருக்கு ஓய்வு சிறப்பானது. நிச்சயம் இதன் மூலம் அவர் தன்னை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவார். அவரால் முன்பு போல செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.
விராட் கோலி போன்ற திறமையான வீரரை ஒரு போதும் தவிர்க்க முடியாது. அணியில் இடம் பிடிக்க வீரர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.
நாங்கள் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
ஐ.பி.எல்.லில் சிறப்பாக ஆடியதால் தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் அணியிலும் அவர் தேர்வாகி உள்ளார். அவரும் விராட் கோலியுடன் ஐ.பி.எல்.லில் பெங்களுரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.
- எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன்.
சேலம்:
டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றியை பெற்றது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்னே எடுக்க முடிந்தது.
கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். மணிமாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். சோனு யாதவ், அலெக்சாண்டர் , அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.
பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் கவுசிக் காந்தி 45 பந்தில் 46 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ), ஜெகதீசன் 33 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி ) , சோனு யாதவ் 7 பந்தில் 26 ரன்னும் ( 1 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர். முருகன் அஸ்வின் , பெராரியோ , ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெல்லை, மதுரை ) தோற்று இருந்தது. அதன் பின்னர் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்சை அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தது.
இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மதுரை பாந்தர்ஸ் இதே நிலையில் இருந்தாலும் நிகர ரன்ரேட்டில் முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறும்போது, "வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி (அவுட் பீல்டு) சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் திரண்டு உற்சாகப் படுத்தினர்" என்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் கூறியதாவது:-
நேர்த்தியாக சரியான திசையை நோக்கி வீச வேண்டும் என்று விரும்பினேன். அதை சரியாக செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று வேகமான பந்து வீச்சை எதிர்பார்த்தனர்.
எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன். அது விக்கெட் கைப்பற்ற உதவியாக இருந்தது.
எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவி 'பிளேஆப்' சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முருகன் கூறும்போது, "நாங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும் வெற்றிக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு என்ன செய்வது என்பது பற்றி அணியினரிடமும், நிர்வாகத்திடமும் விவாதிக்க முயற்சிப்பேன்" என்றார்.
இன்று நடைபெறும் 23-வது 'லீக்' ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5-வது வெற்றி ஆர்வத்திலும், திருப்பூர் அணி 3-வது வெற்றி ஆர்வத்திலும் உள்ளன.
- இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
காலே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்களை எடுத்து இருந்தது.
இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ரன்கள் சேர்த்த நிலையில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
இமாம் உல் ஹக் 35 ரன்னிலும், அசார் அலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
- தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.
பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் விளையாடிய சேலம் அணி 113 ரன்கள் எடுத்தது.
- சேப்பாக் வீரர் சித்தார்த் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் இன்று தொடங்கின.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.
அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய காந்தி 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
சசிதேவ் ஒரு ரன்னுடன் வெளியேற, அதிரடியாக விளையாடிய சோனு யாதவ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சேப்பாக் அணி 14.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.
- சேலம் அணியின் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார்.
- சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் இன்று தொடங்கின.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார். ஜமால் 6 ரன்னுடன் வெளியேற, அக்சய் சீனிவாசன், டேரில் பெராரியோ ஆகியோர் அடுத்து டக் அவுட்டாகினர்.
ரவி கார்த்திகேயன் 12 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க அழைப்பு.
- பிரதமர் மோடியுடன், திமுக எம்.பி.க்கள், டி.ஆர். பாலு, கனிமொழி சந்திப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடியிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கடந்த 15ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.
அப்போது முதலமைச்சர் சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான "தம்பி" சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
- இதேபோல் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
ராம்தின் தனது கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019-ல் விளையாடினார். அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜூலை 2005-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். 2014-ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ராம்தின் 17 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்தினார்.
இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
இவர் 8 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டி மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 3,763 ரன்கள் எடுத்துள்ளார்.
- இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் சண்டிமால், குசால் மெண்டிஸ், பெர்னாண்டோ அரை சதமடித்தனர்.
- பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
கெல்லே:
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஒஷாடா பெர்னாடோ, குசால் மெண்டிஸ் ஜோடி 91 ரன்கள் சேர்த்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிதானமாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எடுத்துள்ளது. சண்டிமால் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:-
நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். ஒரு நம்பமுடியாத பயணத்தை நாங்கள் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்ட்யா உள்ளார்.
- பாண்ட்யா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இதனை சாதித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 4 விக்கெட்டும் பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் ஸ்ரீகாந்த் (1988), சச்சின் (1998), கங்குலி (1999 & 2000), யுவராஜ் (2008 & 2011) ஆகியோர் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களும் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர். ஆனால் பாண்ட்யா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இதனை சாதித்துள்ளார்.
ஹார்த்திக் பாண்ட்யா அதைவிட டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் (52* ரன்கள் & 5/28 விக்கெட், 2018) மற்றும் டி20 கிரிக்கெட்டில் (51 ரன்கள் & 4/33 விக்கெட், 2022) அவர் 50+ ரன்களும் 4 விக்கெட்களும் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்துள்ளார். உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்ட்யா உள்ளார்.






