என் மலர்

  கிரிக்கெட்

  கோலி போன்ற சிறந்தவரை ஒருபோதும் தவிர்க்க முடியாது- தினேஷ் கார்த்திக்
  X

  தினேஷ் கார்த்திக் - விராட் கோலி

  கோலி போன்ற சிறந்தவரை ஒருபோதும் தவிர்க்க முடியாது- தினேஷ் கார்த்திக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாங்கள் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்.
  • விராட் கோலியுடன் ஐ.பி.எல்.லில் பெங்களுரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விராட் கோலி இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஓய்வா? அல்லது நீக்கமா? என்ற விவாதம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

  இந்த நிலையில் விராட் கோலிக்கு விக்கெட் கீப்பரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  கடந்த காலங்களில் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் ரன் குவித்துள்ளார். தற்போது அவருக்கு ஓய்வு சிறப்பானது. நிச்சயம் இதன் மூலம் அவர் தன்னை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவார். அவரால் முன்பு போல செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

  விராட் கோலி போன்ற திறமையான வீரரை ஒரு போதும் தவிர்க்க முடியாது. அணியில் இடம் பிடிக்க வீரர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.

  நாங்கள் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்.

  இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

  ஐ.பி.எல்.லில் சிறப்பாக ஆடியதால் தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் அணியிலும் அவர் தேர்வாகி உள்ளார். அவரும் விராட் கோலியுடன் ஐ.பி.எல்.லில் பெங்களுரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×