சர்வதேச போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீசின் தினேஷ் ராம்தின், லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.இதேபோல் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
லெண்டல் சிம்மன்ஸ்
லெண்டல் சிம்மன்ஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

ராம்தின் தனது கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019-ல் விளையாடினார். அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூலை 2005-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். 2014-ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ராம்தின் 17 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்தினார்.

இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இவர் 8 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டி மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 3,763 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com