என் மலர்
விளையாட்டு
- ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் உள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 7-ந்தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே செல்கிறது.
அந்த அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.
ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் ஆஸ்ரேலியாவில் நடக்கிறது.
இதற்காக இந்திய அணி முழு வீச்சில் தயார் செய்ய இந்த சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் நியமனம் இருக்கிறது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
- ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் மைக்கெல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 13 வது ஓவரை வீசிய பிரேஸ்வெல் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 2-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மார்க் அடேர் 4-வது பந்தில் மெக்கார்த்தி 5-வது பந்தில் யங் ஆகியோர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Michael Bracewell can't Do anything Wrong
— ⚡ (@Visharad_KW22) July 20, 2022
Hat-trick in his First Over of T20 Internationals is just amazing and Unbelievable 🥵pic.twitter.com/nIPmvgCmjM
இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரராக ஜேக்கப் ஓரம் 2-வது வீரராக டிம் சவுத்தியும் உள்ளனர்.
- 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன.
- இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 23-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 12 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் தலா 8 புள்ளிகளும், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் தலா 6 புள்ளிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளியும் பெற்றுள்ளன. சேலம் அணி புள்ளி எதுவும் பெறாமல் உள்ளது.
இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சேலம் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றுள்ளது. இதனால் இன்றாவது முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படு கிறது. திருச்சி அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
- 2-வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார்.
- கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
யூஜின்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
அத்துடன் 8-வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அதன் அடிப்படையில் அன்னு ராணி 8-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் 2-வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரை தொடர்ந்து, அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
- இதில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார்.
அதேபோல் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் விராட் கோலியும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.
ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 8-வது இடத்தில் உள்ளார்.
- திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
- இரண்டாவதாக ஆடிய மதுரை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, திருப்பூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 45 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, அதன்பின்னர் சரிவில் இருந்து மீள முடியவில்லை.
இறுதியில், மதுரை அணி 76 ரன்களில் சுருண்டது. இதனால் திருப்பூர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார்.
- மதுரை அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் கிரண் ஆகாஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, பின்னர் நிதானமாக ஆடியது.
- சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி அதற்கு ஆதரவளிக்கும் முக்கிய நபராக விளையாட்டுத்துறை வீரர்கள் விளங்குகிறார்கள்.
- டாரியாவின் காதலி நட்டாளியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கேப்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தில் டாரியா கசட்கினா உள்ளார். 25 வயதான டாரியா கடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அரை இறுதி வரை சென்றார். இந்நிலையில் டாரியா கசட்கினா தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் ஓரின சேர்க்கைக்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஓரினச்சேர்க்கை இயற்கையை மீறிய உறவு இவை அனைத்துக்கும் தடை விதிக்க சட்டம் தற்போது இயற்றப்பட இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் கால்பந்து வீராங்கனை நடியா, தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனை அடுத்து தற்போது டாரியா கசட்கினாவும் தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிவித்து தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
இதில் அமைதியை விரும்புங்கள். அது மட்டும் தான் முக்கியம். மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி அதற்கு ஆதரவளிக்கும் முக்கிய நபராக விளையாட்டுத்துறை வீரர்கள் விளங்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாரியாவின் காதலி நட்டாளியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கேப்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் 160 ரன்கள் குவித்தார்.
- பாபர் அசாம் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்து வெளியேறினார்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக சண்டிமால் 76 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை தரப்பில் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமால் 94 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நவாஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரனான அப்துல்லா ஷபீக் 160 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் அரை சதம் அடித்து வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி 24-ந் தேதி தொடங்குகிறது.
- காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்திய அணியில் இருந்து தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டது.
- 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்கா அணி சார்பாக வேண்டர்டுசைன் சிறப்பாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 77 ரன்களும், துவக்கவீரர் மலான் 57 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 334 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக நல்ல துவக்கத்தை பெற்றது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் நிச்சயம் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்க வீரர்கள் இருவரை தொடர்ந்து ஜோ ரூட் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் இறுதியில் இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டி இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்க்கு கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே வேளையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது ஒரு வினோதமான நிகழ்வும் நடந்துள்ளது.

ஏனெனில் 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் குவித்தும் அந்த அணியின் வீரர்கள் ஒருவர் கூட ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டதே தவிர ஒரே ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி எந்த ஒரு சிக்சரும் அடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது. 2020-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 345/8 ரன்களை எடுத்தது. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த அணியாக இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது.
- திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது.
- மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.
சேலம்:
8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -மதுரை அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது. மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.






