என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி.என்.பி.எல். - 53 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது திருப்பூர்
    X

    டி.என்.பி.எல். - 53 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது திருப்பூர்

    • திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
    • இரண்டாவதாக ஆடிய மதுரை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, திருப்பூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 45 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, அதன்பின்னர் சரிவில் இருந்து மீள முடியவில்லை.

    இறுதியில், மதுரை அணி 76 ரன்களில் சுருண்டது. இதனால் திருப்பூர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×