என் மலர்
விளையாட்டு
- ஜடேஜா ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. துணைக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார். இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜடேஜா முதல் ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜடேஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம். இருப்பினும் மருத்துவக் குழு ஜடேஜா குறித்த அறிக்கையை அளிக்கும் போது மட்டுமே அது குறித்து கூற முடியும்.
- அப்ரிடிக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார்.
- இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.
பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை அணிக்கு எதிராக 341 ரன்கள் சேசிங் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் சேசிங் செய்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இதே அணிக்கு எதிராக 382 ரன்கள் பாகிஸ்தான் அணி சேசிங் செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.
- இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும்.
சேலம்:
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது.
சேலத்தில் இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
கவுசிக்காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.
அந்த அணியில் ஜெகதீசன், சசிதேவ், ராதா கிருஷ்ணன், ஹரீஷ்குமார், சாய்கிஷோர், சித்தார்த், அலெக்சாண்டர்,. சந்தீப் வாரியர் ஆகிய வீரர்கள் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4 வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.
அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க திருப்பூர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
அந்த அணியில் அரவிந்த், சுப்பிரமணியன், ஆனந்த், மான்பாப்னா, எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், ராஜ்குமார், மணிகண்டன், மோகன் பிரசாத் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது.
- இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மும்பை:
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அங்கு இந்த போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
- இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.
- முதல் போட்டி நடைபெறும் மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ந்தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2-ம் தர அணியே களம் இறங்குகிறது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரராக ஷிகர் தவானுடன் இணைந்து இஷான் கிஷன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் களம் காணுவார். தவானின் ஆட்டத்திறன் மெச்சும்படி இல்லை. கடைசி 5 ஆட்டங்களில் 112 ரன்களே எடுத்துள்ளார். இந்த தொடரில் அசத்தினால் தான் அணியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் அவரது இடம் கேள்விக்குறி தான். மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரர்களும் திறமையானவர்கள் தான். ஆனால் ஒருங்கிணைந்து விளையாடுவதில் தடுமாறுகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து முதலில் பேட்டிங் செய்த 12 ஆட்டங்களில் 9-ல் ஆல்-அவுட் ஆகியுள்ளனர். அதாவது 50 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடிப்பதில்லை. எனவே 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவதில் கவனம் செலுத்தும்படி பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஆல்-ரவுண்டர் ஹோல்டர் வருகை தந்திருப்பது அணியின் சரியான கலவைக்கு உதவிகரமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று இருக்கிறது. இதில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக உள்ளூரில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததும் அடங்கும். கேப்டன் நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ரோமன் பவெல், ஹோல்டர் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடுவதை பொறுத்தே அவர்கள் எந்த அளவுக்கு சவாலாக இருப்பார்கள் என்பது தெரிய வரும்.
போட்டி நடக்கும் போர்ட் ஆப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இந்திய அணி 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் மழையால் முடிவு கிடைக்கவில்லை. 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஓர் அணியின் அதிகபட்சமாகும். 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக கனடா 75 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும்.
இந்திய வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் பட்ேடல், ஷர்துல் தாக்குர், அவேஷ்கான் அல்லது பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், ஷமார் புரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ். உள்ளூரில் இது பகல் ஆட்டமாகும். ஆனால் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பேன்கோட் நிறுவனம் பெற்றுள்ளது.
அதாவது பேன்கோட் டிஜிட்டல் இணையவழியாக போட்டியை பார்க்கலாம். அந்த நிறுவனம் இந்தியாவில் டி.வி.யில் ஒளிபரப்பு உரிமத்தை தூர்தர்ஷனிடம் வழங்கியுள்ளது. எனவே இரவு 7 மணி முதல் டி.டி. ஸ்போர்ட்சிலும் இந்த ஆட்டத்தை காணலாம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
அந்த அணிக்கு எதிரான கடைசி 11 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 136 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 67-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
- தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
- இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யூஜின்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.
இதில் இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்சில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார். 'பி' பிரிவில் மற்றொரு அந்நிய வீரர் ரோகித் யாதவ் இடம் பெற்று இருந்தார்.
இதில் 83.50 மீட்டர் இலக்கை எட்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவாக சிறந்த திறனை வெளிப் படுத்தும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். 2019-ம் ஆண்டு 2-வது சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க வில்லை.
'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்தார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ரோகித் யாதவ் 11-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கிரெணடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ( பி பிரிவு) 89.91 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பெற்றார்.
12 பேர் பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
டிரிபிள் ஜம்ப்பில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் எல்டோஸ் பால் முன்னேறினார். அவர் தகுதி சுற்றில் 16.68 மீட்டர் தாண்டினார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த அவர் 6-வது இடத்தை பிடித்தார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ஒருவராக அவர் வந்துஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்ற இந்தியர்களான பிரவீன் சித்தரவேல் (16.49 மீட்டர்) அப்துல்லா அபுபக்கர் (16.45 மீட்டர்) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே, முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- இஷான் கிஷான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்பு.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும், முதல் ஒருநாள் போட்டி போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடரில் இடம் பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி 20 அணியில் ராகுல் இடம் பெறாத பட்சத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
- சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
- திருச்சி அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டபோதும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 விக்கெட் கைப்பற்றிய ரஹில் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சேலம் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
- சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
- திருச்சி அணி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த சேலம் அணி, அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கோபிநாத் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். அவர் 5 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
திருச்சி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதீக் ரஹ்மான் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்கிறது.
- இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது.
ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் , 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்கள்.
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை ( 22-ந் தேதி ) நடக்கிறது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா , ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா , முகமது ஷமி ஆகியோருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலோனர் 20 ஓவர் தொடரில் ஆடுகிறார்கள்.
இந்த போட்டியில் தவானுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்று தெரிய வில்லை. சுப்மன்கில் , இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில் கில்லுக்கு வாய்ப்பு உள்ளது.
தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஜடேஜா ஆகியோர் மிடில் வரிசையில் ஆடு வார்கள். வேகப்பந்து வீரர் களில் பிரசித்கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்தில் யுசுவேந்திர சஹாலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவேஷ்கான், ஷர்துல் தாகூர், அக்ஷர் படேல் ஆகி யோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.
மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய 5 ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.
வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் ஹோல்டர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். ஹாய் ஹோப், புரூக்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அல்ஜாரி ஜோசப், அகில் உசேன் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 137-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 136 போட்டியில் இந்தியா 67-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 4 போட்டி முடிவு இல்லை.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
- உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
- இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். புஜாரா, வாஷிங்டன் சுந்தர், சைனி, உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
புஜாரா சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டி ஜூலை 19-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் சசக்ஸ் அணியின் கேப்டன் டாம் ஹாலண்ட் காயமடைந்தார். இந்நிலையில் வேறு இங்கிலாந்து வீரர்கள் இருந்தாலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த அந்த அணி நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 523 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் புஜாரா 231 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் புஜாரா சசெக்ஸ் அணிக்காக மூன்றாவது இரட்டை சதம் அடித்தார்.
💯 💯 @cheteshwar1 does it again!#LVCountyChamp pic.twitter.com/JehWCswOCq
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது குணமடைந்தது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லேன்ஷைர் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டார்.
First appearance for @lancscricket ✅
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
First 5-fer for @lancscricket ✅
What a performance from @Sundarwashi5 👏 #LVCountyChamp pic.twitter.com/SsbpVIFgau
இந்நிலையில் நேற்று நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயத்திலிருந்து குணமடைந்து சுழலுக்கு சவாலான இங்கிலாந்து மைதானங்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதே தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் கெண்ட் அணிக்காக ஒப்பந்தமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
Pure quality ⚡ @navdeepsaini96 has put on a show in his first @KentCricket outing ✋ #LVCountyChamp pic.twitter.com/UxJbZFUZqE
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
- நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன்.
- விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன்.
இந்திய அணி 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்பட 3 பேருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார். அவர் கடைசியாக 3 வருடத்திற்கு முன்பு சதம் அடித்தார். விராட் கோலியை இந்திய அணி முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலிக்கு இது ஒரு கடினமான காலம் என்பதை நான் அறிவேன். அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் அனைத்து சிறந்த வீரர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படும். பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் சரி இந்த நிலைமையை அவர்கள் கடந்து ஆக வேண்டும். ஆனால் சிறந்த வீரர்கள் கடினமான சூழலில் எப்படி எதிர்கொண்டு மீண்டு வருகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.
விராட் கோலிக்கும் அது சீக்கிரம் நிகழும் என நம்புகிறேன். வீரராகவும் கேப்டனாகவோ இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். விராட் கோலி இல்லாத அணியை விட, அவர் பிளேயிங் லெவனில் இருக்கும் அணியை பார்த்து தான் நான் அச்சம் கொள்வேன். அது தான் விராட் கோலி ஏற்படுத்தி இருக்கிற தாக்கம்.
உலகக்கோப்பை நடைபெறும் இந்த காலத்தில் விராட் கோலியை அணியை விட்டு நீக்கி வேறு ஒருவரை நீங்கள் கொண்டு வந்தால், மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்புவது கடினமாகும். நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கு அவருடைய நம்பிக்கையை மீட்க நடவடிக்கை எடுப்பேன். விராட் கோலியின் தற்போது உள்ள சூழலை நான் லேசாக மாற்ற முயற்சி செய்வேன்.
விராட் கோலி ஃபார்முக்கு வர நான் காத்திருப்பேன். விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் ஃபார்மில் இல்லை என்றால் கூட அவரை விளையாட வைக்க வேண்டும். அப்போதுதான் லீக் சுற்றுகளில் விராட் கோலி ஓரளவுக்கு உத்வேகத்தை பெற்று நாக் அவுட் சுற்றுகளில் எரிமலை போல் வெடித்து அணிக்காக சிறந்து விளையாடுவார்.






