search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழையால் ஆட்டம் நிறுத்தம்- டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்ற திருச்சி வாரியர்ஸ்
    X

    மழையால் ஆட்டம் நிறுத்தம்- டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்ற திருச்சி வாரியர்ஸ்

    • சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
    • திருச்சி அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டபோதும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 விக்கெட் கைப்பற்றிய ரஹில் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    சேலம் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    Next Story
    ×