என் மலர்

  விளையாட்டு

  உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா
  X

  நீரஜ் சோப்ரா

  உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
  • இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  யூஜின்:

  18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது.

  இதில் இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்சில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார். 'பி' பிரிவில் மற்றொரு அந்நிய வீரர் ரோகித் யாதவ் இடம் பெற்று இருந்தார்.

  இதில் 83.50 மீட்டர் இலக்கை எட்டுபவர்கள் அல்லது அதற்கு குறைவாக சிறந்த திறனை வெளிப் படுத்தும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

  நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். 2019-ம் ஆண்டு 2-வது சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்க வில்லை.

  'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த ரோகித் யாதவ் 80.42 மீட்டர் எறிந்தார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ரோகித் யாதவ் 11-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

  கிரெணடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ( பி பிரிவு) 89.91 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பெற்றார்.

  12 பேர் பங்கேற்கும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

  டிரிபிள் ஜம்ப்பில் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் எல்டோஸ் பால் முன்னேறினார். அவர் தகுதி சுற்றில் 16.68 மீட்டர் தாண்டினார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த அவர் 6-வது இடத்தை பிடித்தார். சிறந்த திறனை வெளிப்படுத்திய 12 வீரர்களில் ஒருவராக அவர் வந்துஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

  மற்ற இந்தியர்களான பிரவீன் சித்தரவேல் (16.49 மீட்டர்) அப்துல்லா அபுபக்கர் (16.45 மீட்டர்) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

  Next Story
  ×