என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்
    X

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்

    • இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது.

    ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் , 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்கள்.

    இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை ( 22-ந் தேதி ) நடக்கிறது.

    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா , ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா , முகமது ஷமி ஆகியோருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலோனர் 20 ஓவர் தொடரில் ஆடுகிறார்கள்.

    இந்த போட்டியில் தவானுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்று தெரிய வில்லை. சுப்மன்கில் , இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதில் கில்லுக்கு வாய்ப்பு உள்ளது.

    தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஜடேஜா ஆகியோர் மிடில் வரிசையில் ஆடு வார்கள். வேகப்பந்து வீரர் களில் பிரசித்கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்தில் யுசுவேந்திர சஹாலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவேஷ்கான், ஷர்துல் தாகூர், அக்‌ஷர் படேல் ஆகி யோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய 5 ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.

    வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் ஹோல்டர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். ஹாய் ஹோப், புரூக்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அல்ஜாரி ஜோசப், அகில் உசேன் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 137-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 136 போட்டியில் இந்தியா 67-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 4 போட்டி முடிவு இல்லை.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

    Next Story
    ×