என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

நெல்லை அணி வீரர்கள்
டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சதம் விளாசினார் சஞ்சய் யாதவ்- 236 ரன்கள் குவித்தது நெல்லை

- முதலில் விளையாடிய நெல்லை அணியில் பாபா அபராஜித் 92 அடித்தார்.
- திருச்சி அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது நெல்லை.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது. இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்குகிறது.