search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மகளிர் உலகக்கோப்பை ஆக்கி-  ஜப்பானை தோற்கடித்தது இந்தியா
    X

     இந்திய மகளிர் ஆக்கி அணி 

    மகளிர் உலகக்கோப்பை ஆக்கி- ஜப்பானை தோற்கடித்தது இந்தியா

    • இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 இரண்டு கோல்கள் அடித்தார்.
    • 9-12வது இடங்களுக்கான போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

    எஸ்டாடி டெர்ரசா:

    15-வது மகளிர் உலக கோப்பை ஆக்கிப் போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஸ்பெயினின் எஸ்டாடி டெர்ரசா நகரில் நேற்று நடைபெற்ற 9-12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.

    இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 கோல்களும், தீப் கிரேஸ் எக்கா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் யூ அசாய் ஒரு கோல் போட்டார்.

    முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

    Next Story
    ×