search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல் - சேலம் அணி வெற்றி பெற 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை
    X

    இரு அணி கேப்டன்கள்

    டி.என்.பி.எல் - சேலம் அணி வெற்றி பெற 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை

    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சதுர்வேதி, விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஆகியோர் 59 ரன்கள் சேர்த்தனர்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×