search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோலியை நீக்க வேண்டும்: கபில்தேவ் கருத்துக்கு ரோகித்சர்மா பதிலடி
    X

    கபில் தேவ் - ரோகித் சர்மா 

    கோலியை நீக்க வேண்டும்: கபில்தேவ் கருத்துக்கு ரோகித்சர்மா பதிலடி

    • விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
    • ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பார்ம் இன்றி இருப்பதால் கடும் விமர் சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, 'பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. 20 ஓவர் போட்டியில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உலகின் நம்பர் 2 பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியையும் நீக்கலாம்' என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கபில்தேவ் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    அவர் (கபில்தேவ்) வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது.

    நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற-தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது.

    விராட் கோலி

    ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும். இது அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால ஆட்டத்தை பார்க்கக்கூடாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.

    விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×