என் மலர்
விளையாட்டு
- சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
- பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.
இஸ்லாமாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.
அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.
- முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
- வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்தார்.
மும்பை:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.
இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்தியாவின் 20 ஓவர் கேப்டன்ஷிப் பற்றி விவாதிக்கப்படவில்லை. தேர்வுக்குழு மட்டுமே கேப்டன் பதவி பற்றி முடிவு எடுக்க முடியும் என்றார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.
- இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.
இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
- புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய அணி டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும்.
- சகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
மிர்பூர்:
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் வெற்றியுடன் தொடரை முடிக்க இந்திய வீரர்கள் விரும்புகிறார்கள்.
இந்த டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார்.
பேட்டிங் மட்டும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. புஜாரா (192 ரன்), சுப்மன்கில் (130) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தனர்.
இது தவிர ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட் ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். விராட் கோலி , ராகுல் இந்த டெஸ்டில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவ் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். அக்ஷர் படேல், முகமது சிராஜ் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள்.
சகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடுவார்கள்.
இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் அந்த அணி உள்ளது. தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகீர் ஹசன், கேப்டன் சகீப்-அல்-ஹசன், தய்ஜுல் இஸ்லாம், மெகிதி ஹசன் மிராஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய 12 டெஸ்டில் இந்தியா 10-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
- வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பியூனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.
தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.

கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன்.
- நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் 15 கோடிக்கு மேல் ஏலம் போய் முன்னணி வீரராக விளங்கி வந்தார். எனினும் இந்திய அளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிசன் சதம் விளாசினார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இஷான் கிஷன் இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
"Sorry I can't sign above @MSDhoni's Autograph" - Ishan Kishan ❤️pic.twitter.com/5b5yhuEC3X
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) December 20, 2022
அப்போது போனை வாங்கி பார்த்த போது தான் இஷான் கிஷனுக்கு தெரிந்தது அதில் டோனியின் கையெழுத்து இருந்தது என்று. உடனே இதனை பார்த்து ஷாக்கான இஷான் கிஷன், அதில் டோனி பாயின் கையெழுத்து இருக்கிறது. என்னை ஏன் அதற்கு மேலே உள்ள இடத்தில் கையெழுத்துப் போட சொல்கிறீர்கள். அதை என்னால் செய்ய முடியாது.
வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன். டோனி கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன். அதுதான் அவருக்கு உரிய மரியாதை என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை.
- நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும்.
இந்திய அணியின் முன்னணி வீரர்களை கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். தற்போது போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ ஓய்வு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் முன்னணி வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவின் உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கபில் தேவ் பேசியது பின்வருமாறு:-
நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறோம் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என்ற வார்த்தை தற்போது உள்ள வீரர்கள் இடையே மிகவும் சர்வசாதாரணமாக மாறிவிட்டது. நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அப்போது எதற்கு இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். உங்களை யார் விளையாட சொல்கிறார்கள்.
இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இந்த திட்டுவதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை. நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும். அது எப்படி சாத்தியமாகும்? 100 கோடி மக்கள் இருந்து வெறும் 20 பேர் தான் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
இதை பெருமை என்று சொல்லுங்கள் இதனை நீங்கள் எப்படி நெருக்கடி ,அழுத்தம் என்று சொல்வீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
நீங்கள் மக்களிடமிருந்து அவ்வளவு அன்பை பெறுகிறீர்கள். இனி அழுத்தம் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பெருமை கொள்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் வார்த்தை.
உங்களால் விளையாட முடியவில்லை என்றால், பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் செய்யாதீர்கள். உங்களை யார் செய்து ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது. எங்கேயாவது சென்று மளிகை கடை திறவுங்கள். அங்கு வாழைப்பழம் முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
என்று கபில்தேவ் விமர்சித்துள்ளார்.
- பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,
- பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆட்டங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முல்தானில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், கராச்சியில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவுக்குப் பிறகு, அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
பாபரின் கேப்டன்சிக்காக பலர் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, அவரது கேப்டனுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
கொஞ்சம் மரியாதை காட்டுங்கள் என்று ரசிகர்களை வலியுறுத்திய ஷஹீன் டுவிட்டரில் ஒரு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பாபர் அசாம் எனது பெருமை, பாகிஸ்தானின் பெருமை என்று பாராட்டிய அவர், ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதுடன், கதை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
- 15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்குகிறது.
சென்னை:
15-வது உலக ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகிற ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்தியா இங்கிலாந்து ஸ்பெயின் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், பெல்ஜியம், தென் கொரியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா உள்பட 16 நாடுகள் பங்கு பெறுகிறது.
ஹாக்கி விளையாட்டு போட்டி துவங்குவதையொட்டி இதில் வழங்கப்படும் உலக கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- டி20 கிரிக்கெட் போன்று டெஸ்ட் போட்டியை வீரர்களை பார்க்க வேண்டும்.
- டி20 வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்ய வேணடும் என ரமீஸ் ராசா விருப்பம்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை அனைவரும் உற்று நோக்கினர். இதற்கு காரணம் இங்கிலாந்து அணியின் அணுகுமுறைதான்.
இங்கிலாந்து அணி எந்தவித அச்சமின்றி தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான். வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டும். டிரா என்பதில் பலனில்லை என்ற கொள்கையை வகுத்துள்ளது.
இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுலும் வங்காளதேசத்திற்கு எதிராக அதே அணுகுமுறையில்தான் விளையாடுவோம் என்றார். ஆனால், முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகள் சரிய நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவும், அதிரடி ஆட்டத்தை விரும்புவதாகவும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போன்று பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாபர் அசாமிடம் கேட்டபோது, எல்லா விசயங்களும் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்றிவிட முடியாது என்றார்.
2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்த்தபோது பேட்டியளித்த போது ரமீஸ் ராஜா கூறியதாவது:-
இங்கிலாந்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு, ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டி20 போன்று விளையாட வேண்டும் என பாபர் அசாமிடம் நான் பரிந்துரைத்தேன். ஆகவே, நீங்கள் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இது பாகிஸ்தானின் மீது கட்டாயப்படுத்தப்பட்ட மனநிலை, இது எனக்கு முற்றிலும் பிடிக்கும்.
தற்போது இங்கிலாந்து விளையாடி வருவதுபோன்று, இது டி20 வடிவ கிரிக்கெட் என வருங்கால வீரர்கள் கருத வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாபர் அசாம் பதில் அளித்து கூறியதாவது:-
கதவு எதற்காகவும் மூட்டப்படவில்லை. எல்லாவற்றிற்காகவும் திட்டம் தீட்டப்பட்டது. ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கும் நான் அதை செய்கிறோம். விசயங்கள் நீங்கள் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. அதற்கு நேரம் எடுக்கும். மனநிலையை மாற்றுவதற்கு நேரம் தேவை. அப்புறம், நாங்கள் பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடும்போது, பத்திரிகையாளர்கள் நீங்கள் ஏன் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கேட்கிறார்கள்.
நாங்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் மாற்று வழியில் விளையாடவில்லை எனக் கேட்கிறார்கள். அங்கே எப்போதுமே கேள்விகள் எழுப்பப்படும், எல்லோரையும் சந்தோசப்படுத்த முடியாது. இறுதியாக போட்டியின் முடிவுதான் விசயம். முடிவு சரியாக கிடைக்காவிடில், கேள்விகள் எழுப்பப்படும். நாம் என்ன செய்தோம்? என்பது விசயம் அல்ல...
இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்தார்.
- சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது.
- இங்கிலாந்து பாஸ்பால் (BazBall) அணுகுமுறை கடைபிடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இங்கிலாந்து அணி கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகிய இருவரும் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். அவர்கள் எண்ணம்போல் இங்கிலாந்து அணி செயல்பட்டது.
பாகிஸ்தான் அணியால் எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை வசை பாடி வருகின்றனர். குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியதாவது:-
எந்தவொரு அணிக்கும் பாகிஸ்தான் மண்ணில் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய சாதனை. இங்கிலாந்து நீண்ட வருடம் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வந்தனர். இது வரலாற்று தொடரை. அவர்கள் பாகிஸ்தானை ஒரு சரித்திரம் ஆக்கினார்கள். அவர்கள் நம்மிடம் ''உங்களுடைய கிரிக்கெட், மனநிலை, சிஸ்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்திவிட்டோம். தற்போது, அதை எப்படி முன்னேற்ற முடிவு செய்யப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளனர்.
நாம் எங்கே தவறு செய்தோம் என்று நமக்குத் தெரியும். நமது அணிக்காக அறிமுகம் ஆனவர்கள், அதற்கு தகுதியானவர்கள்தானா?. நாம் ஆடுகளத்திற்கு ஏற்ப 11 பேருடம் விளையாடினோமா?. கேப்டன் தொழில் சரியாக செய்யப்படவில்லை. நீங்கள் பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாமின் கேப்டன் பதவியை பாருங்கள். பாபர் அசாம்தான் பாகிஸ்தானின் நீண்ட நாள் கேப்டனாக இருந்துள்ளார். குறைந்த பட்சம் தற்போதாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும். சிறந்த முடிவுகளை எடுத்திருக்கனும். மைதானத்தில் தங்களுடைய இருப்பை சிறந்ததாக ஆக்கியிருக்கனும். அவரிடம் எந்தவிதமான நேர்மறையாக விசயங்களும் தென்படவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, எவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பு, வர்ணனையாளர்கள், மீடியாக்களில் ஒவ்வொருவரும் பாகிஸ்தானை இங்கிலாந்து டாமினெட் செய்ததாக பேசினார்கள். ஒருவர் கூட நம்பை பற்றி பேசவில்லை. பாராட்டவில்லை. ஏனென்றால், நாம் எதிர்மறையாக அணுகுமுறையுடன் விளையாடினோம்'' என்றார்.






