என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் 6-வது சதத்தை தவற விட்டார். ரிஷப்பண்ட் 6-வது முறையாக 90 ரன்னுக்கு மேல் அவுட் ஆகி உள்ளார்.

    இந்த நிலையில் சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட வீரராக நான் சாதனைகள் பற்றி சிந்திப்பது இல்லை. 3 இலக்கம் என்பது வெறும் நம்பர்தான். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.

    சதம் அடித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி நடக்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அதற்காக வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் நன்றாக அமைந்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • முதலில் ஆடிய கொழும்பு அணி 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஜாஃப்னா அணி 164 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. சண்டிமால் 49 ரன் எடுத்தார். போபரா 47 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாஃப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜாஃப்னா அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.

    • 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது.
    • இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம்:

    ரகானே: ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

    பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

    ஷேக் ரஷீத்: ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    நிஷாந்த் சிந்து: ஹரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

    கைல் ஜேமிசன்: நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

    அஜய் மண்டல்: சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

    எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

    • டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் எடுத்துள்ள புஜாரா பிராட்மேனை முந்தினார்.
    • புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்தார்.

    மிர்பூர்:

    இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவரில் 227 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.

    இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 10 ரன்னில் அவுட்டானார். ஷுப்மான் கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். புஜாரா 24 ரன், விராட் கோலி 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து ஆடிய ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 2-ம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

    வங்காள தேசம் சார்பில் தஜிஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில், புஜாரா நேற்று 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.

    பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.

    புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.

    • ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை சாம் கர்ரன், கேமரூன் ஆகியோர் படைத்தனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்சை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்றுது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


    ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீரர்களின் விவரம் வருமாறு:

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    நிகோலஸ் பூரன் -ரூ.16 கோடி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    ஷிபம் மாவி - ரூ. 6 கோடி ( குஜராத் டைட்டன்ஸ்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    முகேஷ்குமார் - ரூ.5.50 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்)

    ஹென்ரிச் கிளாசன் - ரூ.5.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் ஆகியோர் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    புவனேஸ்வர்:

    2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி :

    கோல்கீப்பர் - கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன்

    பின்களம் - ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

    நடுகளம் - மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

    முன்களம் - மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

    மாற்று வீரர்கள் - ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

    • ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சாம் கர்ரன்
    • இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. முன்னணி வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் உள்ளார். இவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    • ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவர்களில் 227 ரன்னில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன் எடுத்தார். உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 3 ரன்னும், சுப்மன் கில் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 208 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.

    தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். போட்டி தொடங்கிய 6-வது ஓவரில் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 27 ஆக இருந்தது. அவரது விக்கெட்டை தஜிஜுல் இஸ்லாம் கைப்பற்றினார்.

    அதற்கு அடுத்த 2-வது ஓவரில் இந்திய அணியின் 2-வது விக்கெட் சரிந்தது. சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டையும் தஜிஜுல் இஸ்லாம் தான் வீழ்த்தினார்.

    15.1 ஓவரில் இந்திய அணி 38 ரன்னில் 2 விக்கெட் இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாரா-விராட்கோலி ஜோடி ஆடியது. 18.2 ஓவரில் இந்தியா 50 ரன்னை தொட்டது. இந்த ஜோடியையும் தஜிஜூல் இஸ்லாம் பிரித்தார். புஜாரா 24 ரன்னிலும் விராட் கோலி 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ரன்னின் எண்ணிக்கை 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் இருந்தது.

    இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 100 ரன் பார்டர்ஷிப் கொடுத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் சதம் அடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 4 ரன்னில் வெளியேறினார்.

    தற்போது அஸ்வின் - உனத்கட் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. இந்திய அணி 83 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.
    • இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இதேபோல் இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.

    கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் வாங்கி உள்ளது. அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருக்கிறது. அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது. 

    ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் இந்த ஏலத்தில் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

    • சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
    • சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 தினங்களாக நடந்தது. போட்டி முடிவில் பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 30 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் பிரிவில் லயோலா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் பதக்கம் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    சிறந்த வீராங்கனையாக சுமத்ரா (எத்திராஜ்), சிறந்த வீரராக அருண் குமார் (டி.ஜி. வைஷ்ணவா) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மூலம் மாதம் தோறும் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
    • தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    2004-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. 10 முதல் 20 ரஞ்சி போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மூலம் மாதம் தோறும் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார்.

    ×