search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் - பிராட்மேனை முந்திய புஜாரா
    X

    புஜாரா

    டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் - பிராட்மேனை முந்திய புஜாரா

    • டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் எடுத்துள்ள புஜாரா பிராட்மேனை முந்தினார்.
    • புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்தார்.

    மிர்பூர்:

    இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவரில் 227 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.

    இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 10 ரன்னில் அவுட்டானார். ஷுப்மான் கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். புஜாரா 24 ரன், விராட் கோலி 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து ஆடிய ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 2-ம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

    வங்காள தேசம் சார்பில் தஜிஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில், புஜாரா நேற்று 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.

    பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.

    புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.

    Next Story
    ×