என் மலர்
விளையாட்டு

தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மூலம் மாதம் தோறும் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
- தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
சென்னை:
2004-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. 10 முதல் 20 ரஞ்சி போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மூலம் மாதம் தோறும் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார்.
Next Story






