search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்- ஷ்ரேயாஸ் அய்யர்: இந்திய அணி 300 ரன்கள் குவிப்பு
    X

    சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்- ஷ்ரேயாஸ் அய்யர்: இந்திய அணி 300 ரன்கள் குவிப்பு

    • ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவர்களில் 227 ரன்னில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன் எடுத்தார். உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 3 ரன்னும், சுப்மன் கில் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 208 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.

    தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். போட்டி தொடங்கிய 6-வது ஓவரில் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 27 ஆக இருந்தது. அவரது விக்கெட்டை தஜிஜுல் இஸ்லாம் கைப்பற்றினார்.

    அதற்கு அடுத்த 2-வது ஓவரில் இந்திய அணியின் 2-வது விக்கெட் சரிந்தது. சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டையும் தஜிஜுல் இஸ்லாம் தான் வீழ்த்தினார்.

    15.1 ஓவரில் இந்திய அணி 38 ரன்னில் 2 விக்கெட் இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாரா-விராட்கோலி ஜோடி ஆடியது. 18.2 ஓவரில் இந்தியா 50 ரன்னை தொட்டது. இந்த ஜோடியையும் தஜிஜூல் இஸ்லாம் பிரித்தார். புஜாரா 24 ரன்னிலும் விராட் கோலி 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ரன்னின் எண்ணிக்கை 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் இருந்தது.

    இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 100 ரன் பார்டர்ஷிப் கொடுத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் சதம் அடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 4 ரன்னில் வெளியேறினார்.

    தற்போது அஸ்வின் - உனத்கட் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. இந்திய அணி 83 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    Next Story
    ×